கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபிசர்? கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அபராதம்! ஆய்வாளருக்கு 1லட்சம் பைன்!
சென்னை : கடந்த சில வருடங்களுக்கு முன் காரில் பயணித்தவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு எனப்படும் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

விதி மீறும் வாகனங்கள்
புதிய விதிகளின்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது. அதன்படி பல்வேறு விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாநகரங்களில் கடந்த 26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியது.

அபராதம் உயர்வு
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1000, ஒரு வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ. 1000, செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரூ. 1000, மீண்டும் அதேதவறை செய்தால் ரூ. 5000, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ. 5000, கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ. 1000, நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் ரூ. 500, மீண்டும் அதே தவறை செய்தால் ரூ. 1500, ஆட்டோக்களில் சீருடை அணியாவிட்டால் ரூ. 500, அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 500 என அபராத தொகை ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

காருக்கு ஹெல்மெட்?
அதே நேரத்தில் சில நேரங்களில் அபராதம் விதிப்பதிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் காரில் பயணித்தவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞரான சிவன் ராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு நண்பர் ஒருவருடன் வெள்ளையாபுரத்திற்கு சென்றிருக்கிறார்.

100 ரூபாய் அபராதம்
அப்போது அவரை வழிமறித்த காவல் ஆய்வாளர் சிலைமணி என்பவர் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் இருந்த முகமது யாசிர் என்பவரை ஆய்வாளர் சிலைமணி தாக்கியதாகவும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி 2000 ரூபாயை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஹெல்மெட் அணியவில்லை என காரில் பயணித்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அதற்கான ரசீதையும் ஆய்வாளர் சிலை மணி வழங்கியுள்ளார்.

ஒரு லட்சம் பைன்
இந்த நிலையில் இதுகுறித்து சிவன் ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, ஆய்வாளர் சிலை மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு பரிந்துரைத்துள்ளார், இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications