ஒன் இந்தியா நேர்காணல் எதிரொலி.. எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர்கள் பணி சுமை குறைப்பு.. உடனே நடந்த மாற்றம்
சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் மையமான எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் தான் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஒன் இந்தியாவிற்கு அண்மையில்அன்பில் மகேஷ் நேர்காணல் அளித்தார். அப்போது இதுபற்றி கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 10 நாளில் தற்போது ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்த 'எமிஸ்' தளப் பதிவு சுமை குறைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் மையம் என்று கூறப்படும் "எமிஸ்" தளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தளத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தினமும் அதிகளவிலான தகவல்களை மாணவர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த பணிகள் காரணமாக ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் இந்த சுமையை குறைக்கச் சொல்லி கல்வித் துறையிடமும் முறையிட்டு வந்தார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் பணி சுமை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வுக்காணப்படும் என்று கூறியதுடன், அதற்கான முயற்சிகள் உடனே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவு பதிவு செய்வதையும், மதிப்பிடுவதற்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழு தற்போதுள்ள தரவு பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு EMIS-இல் தரவுகளை பதிவு செய்யும் பணியினை எளிதாக்கவும், நெறிப்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. பள்ளிகள் அளவில் விபரங்களை பதிவு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில் அத்தியாவசியமான விவரங்களை மட்டுமே பராமரிக்கும் வகையிலும், தரவு பதிவுச் செய்யும் பணிகள் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால், ஆசிரியர்களுக்கு பெரும் சுமையாக இருந்த எமிஸ் தளத்தில் விவரங்களை பதிவு செய்யும் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் "அடல்"ஆய்வக தொகுதி பதிவு எமிஸ் தளப்பதிவில் இருந்து அகற்றப்படுகிறது. மேலும் நிதி, நிறுவனம், பள்ளி நன்கொடை, தகவல் தொடர்பு, மனுக்கள், செயல்முறை, உதவித்தொகை, மாணவர் ஊக்கம், ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள், பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள் சார்ந்த பதிவுகளும் நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, விலையில்லா பாடப்பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள், பள்ளி சார்ந்த விவரங்கள் உள்ளிட்ட சில விவரங்களை பதிவு செய்வதிலும் பணிகள் சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது., இந்த நடவடிக்கைகள் வாயிலாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக தரவு உள்ளீடு சார்ந்த பணிச் சுமையை கணிசமாக குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த ஏதுவாக அமையும் என்று பள்ளி கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications