சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க போய்ட்டு வாங்க.. அப்பா, அம்மாவை அனுப்பி வைத்து விட்டு தேமுதிகவை வழிநடத்தும் விஜய பிரபாகரன்

தேமுதிகவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறார் விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிகவை வழிநடத்தும் விஜய பிரபாகரன்- வீடியோ

    சென்னை: அம்மா, அப்பா, என கட்சி சார்பாக யாருமே கூட இல்லாத நிலையில் தேமுதிகவில் பட்டைய கிளப்பி வருகிறார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!!

    விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லாததால், கட்சி அதள பாதாளத்துக்கே போய்விட்டது தெரிந்த சமாச்சாரம்தான். இதனால் அவரது உடல்நிலையில் அக்கறை காட்டி, சிகிச்சை அளித்து தேற்றும் முயற்சியில் குடும்பத்தார் இறங்கி விட்டனர். இதனால் கட்சியை மேலும் பலப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

    இதனையடுத்துதான் விஜயகாந்த் சில மாற்றங்களை கட்சிக்குள் கொண்டு வந்தார். நிர்வாகிகள் தேர்வு, பொருளாளராக பிரேமலதா நியமனம், கட்சிக்குள் மூத்த மகனை இழுத்து வந்தது என்பன பல அதிரடிகளை அறிவித்தார். விஜயகாந்த் தன்னை முன்னிறுத்தியதில் இருந்தே விஜயபிரபாகரன் ஸ்கெட்ச் போட்டு வேலையை பார்த்துவருகிறார்.

    ஏகபோக வரவேற்பு

    ஏகபோக வரவேற்பு

    முதல்வேலையாக இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலமாக தன் பக்கம் இழுக்கும்படி வியூகங்களை அமைத்தார். இரண்டாவது, கட்சி நிர்வாகிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதற்கே இவரை வாழ்த்தியும், போற்றியும் நிறைய கட் அவுட்கள், பேனர்கள் வழி நெடுகிலும் நிர்வாகிகள் சார்பாக வைக்கப்பட்டது.

    நிமிர துவங்கியது

    நிமிர துவங்கியது

    மூன்றாவதாக, செய்தியாளர்களிடம் பேசிய விதம் அனைவரையும் ஈர்த்தது. சர்ச்சையில் சிக்காமல், உஷாராகவும், அதே சமயம், யாருமே எதிர்பாராத வகையிலும் பதில் அளிக்க ஆரம்பித்தார். இதெல்லாம் இவ்வளவு காலமாக இளைஞர் அணி பதவியில் உள்ள சுதீஷ் செய்யாத காரியங்கள். விஜயபிரபாகரனிடம் உள்ள இந்த சுறுசுறுப்பு நிறைந்த அம்சங்களால்தான் தேமுதிக ஓரளவு நிமிர தொடங்கி உள்ளது.

    அமெரிக்கா போறோம்

    அமெரிக்கா போறோம்

    இவரது செயல்பாடுகளை கண்ட மூத்த தலைகளும், இளைஞர் அணி பதவிக்கு விஜய பிரபாகரனையே நியமிக்கலாமே என்று முணுமுணுக்கும் அளவுக்கு தீயாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசியபோதுகூட, "நாங்கள் அப்பாவை கூட்டி கொண்டு அமெரிக்கா செல்கிறோம்" என்றார். ஆனால் இவர் மட்டும் அமெரிக்கா போகவில்லை. கூப்பிட்டும் போக மறுத்து இருக்கிறார்.

    தெம்பான பதில்

    தெம்பான பதில்

    இதற்கு காரணம், "இப்போதுதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறார்கள், யாருமே இங்கு இல்லாவிட்டால் நன்றாக இருக்காது, அதனால் கட்சியை பலப்படுத்தும் வேலையை நான் பார்த்து கொள்கிறேன் என்று அவர்களுக்கு தெம்பு சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜயபிரபகாரன்.

    விரைவில் வந்து சேரும்

    விரைவில் வந்து சேரும்

    கட்சியில் உங்களுக்கு பொறுப்பு வழங்கப்படுமா என்று கேட்டபோதெல்லாம், பொறுப்பு, பதவியை பார்த்து நான் வரவில்லை என்றே பதிலளித்தாலும், விரைவில் பொறுப்பு தானாக கையில் வந்து சேரும் என்றே கூறப்படுகிறது. இது அவரது பிறந்தநாளின்போதே தொண்டர்களின் கோஷங்கள் மூலமாக வெளிப்பட்டது.

    தூக்கி நிறுத்துகிறார்

    தூக்கி நிறுத்துகிறார்

    இத்தனைக்கும் அந்த பிறந்த நாள் விழாவில் விஜயகாந்த் பங்கெடுக்க முடியவில்லை என்றாலும், சின்ன கேப்டனுக்கு குவிந்த வாழ்த்துக்கள், முழக்கங்கள், நிர்வாகிகளின் எண்ணிக்கைகள் போன்றவை அவரது பலத்தை வெளிப்படுத்தின. எப்படியோ, வீழ்ந்து கிடந்த தேமுதிகவை தூக்கி நிறுத்த விஜயபிரபாகரன் களம்காண புறப்பட்டு விட்டார் என்றே கூறப்படுகிறது.

    English summary
    Vijaya Prabhkaran taks care of DMDK, and he will be take Youth Wing Secretory Soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X