மகளிர் உரிமை தொகை ரூ.1000.. ஆசையாக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்.. என்ன நடக்குது இ சேவை மையத்தில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிவிட்டாலும், இன்னும் இதற்கான அதிகாரபூர்வ பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறி உள்ளன.

ஜூன் 4ம் தேதி மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடங்குவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ பணிகள் இன்றுவரை தொடங்கவே இல்லை. இது தொடர்பாக இ சேவை மையங்களில் நாம் விசாரித்த போது, அதிகாரபூர்வமாக எங்களுக்கு உத்தரவு எதுவும் வரவில்லை. அதேபோல் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பும் எதுவும் வரவில்லை.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

எப்படி விண்ணப்பம் செய்வது, புதிய விண்ணப்ப மாடல் தொடர்பான எந்த அறிவிப்பும் எங்களுக்கு இதுவரை வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். அதாவது விண்ணப்பம் செய்வதற்கான சில விதிமுறை சமீபத்தில் வந்தன.

அதை தவிர வேறு விதமான அறிவிப்புகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று இ சேவை மைய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் உரிமை தொகை விரிவாக்க விதிகள் என்னென்ன?

1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்படாது.

2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.

3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.

4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.

5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் உண்மையான, அதிகாரபூர்வ தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

பின்வரும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

1. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும்.

2. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

3. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

4. தவறான காரணங்கள் பெயர் விடுபட்டவர்கள்.

5. அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்:

ஜூலை மாதம் வழங்கப்படும் தவணையில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சில நாட்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

இந்த முறை தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+