தங்கத்தை விடவும் மதிப்பு.. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டிய குடும்பம்.. இப்போது புழல் சிறையில்
சென்னை: என்றோ வாங்கி வைத்த ஒரு பொருள், தங்கத்தைவிட மதிப்பு அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஒருவருக்கு நடந்துள்ளது. ஆனால் அவர் செய்தது சட்டவிரோதமான செயல். அதன் காரணமாக சிறையில் தற்போது கம்பி எண்ணி வருகிறார். அவரோடு சேர்ந்து 8 பேர் சிக்கியுள்ளார். செங்கல்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை எங்கு இருக்கிறதோ, அங்கு ஒரு காடு உருவாகிவிடும்.பொதுவாக யானைகள் காட்டில் தான் இருக்கும். யானைகள் தான் காடுகள் செழிப்பாக இருக்க காரணம் ஆகும். ஏனெனில் யானைகள் சாப்பிடும் உணவும், அவை போடும் சானமும் அதிகப்படியான புதிய செடிகள் உருவாகவும், காடுகள் செழிப்பாக இருக்கவும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

யானை என்பது இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று போற்றப்படுகிறது. யானை உயிருடன் இருக்கும் போது என்ன மதிப்புஇருக்கிறதோ, அவை இல்லாமல் போனாலும் அதற்கு மதிப்பு அதிகம். அதன் தந்தங்கள் தங்கத்தைவிடவும் விலை மதிக்க முடியாதவை ஆகும்.யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல வெளிநாட்டவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்கி விற்க கடத்தல்காரர்கள் முயல்கிறார்கள். பணக்கார தங்கள் வீடுகளில் ஆடம்பர கலாச்சார பொருளாக யானை தந்தங்கள் இருக்கின்றன. இதற்காகவே உலகம் முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்படுவது நடக்கிறது.. ஆனால் யானைகள் வேட்டையாடப்படுவது மட்டுமின்றி, அதன் தந்தங்களை விற்பதும், வாங்குவதும் இந்தியாவில் பெரிய குற்றம் ஆகும். யானை தந்தங்கள் எந்த ஆண்டு வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தாலும் சிறைக்கு தான் போக வேண்டியதிருக்கும். இந்நிலையில் செங்கல்பட்டு பரனூரில் யானை தந்தத்தை கடத்த முயன்றவர்கள் சிக்கியுள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்த செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 8 பேரை கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் சென்னை ஜமாலியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7-பேரும், பெங்களூருவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1983 ஆம் ஆண்டு நைஜீரியாவில் இருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்த நிலையில் தற்போது 2-கோடிக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றபோது பிடிபட்டதாக வனத்துறையினர் கூறினார்கள்..
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications