சவுந்தர்யா..சஞ்சய் காந்தி..ஒய்எஸ்ஆர்..ஹெலிகாப்டர் விபத்தில் துடிதுடித்து இறந்த மறக்க முடியாத நபர்கள்
இதுவரை நடந்த விமான விபத்தில் பல புகழ்பெற்ற நபர்களை நாம் இழந்துள்ளோம்
சென்னை: முப்பை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நாடு கண்ட பல முக்கிய விமான விபத்துகளும், அதில் சுக்குநூறாக நொறுங்கி மாண்ட பிரபலங்களின் முகங்களும், நம் கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
Recommended Video
இன்று விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 36 பேர் வரை பயணம் செய்ய முடியுமாம்.. கனமிக்கவை.. நவீனமயமானது.. மற்ற ஹெலிகாப்டர்கள் பகலில் மட்டுமே பயணிக்க முடியும் என்றால், இத்தகைய ஹெலிகாப்டர்கள் இரவு நேரத்தில்கூட இயங்கக்கூடியது..
குளிர் பகுதி, பாலைவன பகுதி எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் இந்த ஹெலிகாப்டரை இயக்க முடியும். ராணுவ தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றி செல்வது, எல்லை கண்காணிப்பு, போன்ற பணிகளுக்கு இத்தகைய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது வழக்கம்..

டேங்குகள்
மேலும் எரிபொருள் டேங்குகள் வெடித்து சிதறாதபடி அனைத்தும் ஹெலிகாப்டருக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.. எனினும், ஹெலிகாப்டரில் பாதுகாப்பு தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதாலேயே பெரும்பாலும் விபத்து ஏற்படாலும், அதில், பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது அரிதாகிவிடுகிறது. இப்படி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளினால் எத்தனையோ சிறப்பு வாய்ந்த தலைவர்களையும், புகழ்பெற்ற நபர்களையும் நாம் இழந்துள்ளோம்.. அந்த வகையில் மிக முக்கியமானவர்களை நாம் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து பார்ப்பது அவசியமாகிறது.

தளபதி
முதலில் முப்படை தளபதி பிபின் ராவத், இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத்... பாகிஸ்தான்,சீனாவை கதற கதற அடித்தவர் பிபின் ராவத்..

குட்டி விமானம்
விமான விபத்து என்றாலே அது சஞ்சய் காந்தி மரணம்தான் மக்களுக்கு நினைவிற்கு வரும்.. இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.. அத்துடன் சர்ச்சைகளால் சூழப்பட்டவர்.. தினமும் காலையில், குட்டி விமானத்தில் ஏறி டெல்லியையே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு திரும்புவது இவரது ஹாபி. அப்படித்தான், 1980 ஜுன் 23ந்தேதி காலை 8 மணிக்கு பயிற்சியாளர் சக்சேனாவுடன் கிளம்பினார்.. அந்த விமானத்துக்கு "புஷ்பக்" என்று பெயர்.. சஞ்சய்தான் விமானத்தை ஓட்டினார்... இந்திரா காந்தி வீட்டுக்கு மேலேயே விமானம் பறந்து சென்றது... 3 முறை வட்டமடித்துள்ளது.. 4வது முறை ரவுண்ட் அடிக்கும்போது, சஞ்சய் வீட்டுக்கு பின்னாடியே மரத்தில் மோதி விழுந்ததில், 2 பேரும் இறந்துவிட்டனர். சஞ்சய் காந்தியின் தலை நசுங்கி, கை, கால் எலும்புகளும் நொறுங்கின..!

சோகம்
அடுத்து மோகன் குமாரமங்கலம்.. மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மகன். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர்.. மத்திய உருக்கு அமைச்சராக இருந்தவர்.. கடந்த 1973ம் ஆண்டு உயிரிழந்தார்... முதலில் இவரது உடல் அடையாளம் காணப்படவில்லை.. ஆனால், இவர் வழக்கமாக பயன்படுத்தும் பார்க்கர் பேனா, காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது பெரும் சோகம்.. இதில் அடுத்ததாக மறக்க முடியாத தலைவர், என்.வி.என்.சோமு ஆவார்.. 1996ல் வடசென்னையில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய பாதுகாப்புதுறை இணை அமைச்சராக இருந்தவர். ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

முதல்வர்
ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டி: ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் 2 முறை முதல்வராக இருந்தவர்.. ஏழை மக்களை இதயத்தில் வைத்து நேசித்தவர்.. போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர்.. இந்தியாவில் முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர்.. கடந்த 2009, செப்டம்பர் 2ம்தேதி சித்தூரில் மக்கள் குறை கேட்புக்காக தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அப்போதுதான் எதிர்பாராத விபத்தை சந்தித்தார்.. காலநிலை மாற்றத்தால் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. ஆனால், ஒருநாள் கழித்துதான் ருத்ரகொண்டா என்ற மலைகுன்றின் மீது அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பெருஞ்சோகம். மாநில முதல்வராக இருக்கும்போது விமான விபத்தில் பலியான முதல் முதல்வரும் இவர்தான்.. அவரது இறப்பு செய்தி கேட்டு எத்தனையோ பேர் அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்டனர்.

சௌந்தர்யா
நடிகை சவுந்தர்யாவை தமிழக மக்களால் மறக்கவே முடியாது.. இவர் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை.. பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்.. கடந்த 2004ல் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது விமானம் வெடித்து சவுந்தர்யா உயிரிழந்தார்... இவருடன் பயணம் செய்த அவருடைய சகோதரரும் உயிரிழந்தார்.. சவுந்தர்யா இறக்கும்போது அவர் 2 மாத கர்ப்பமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி மக்களை கலங்கடித்தது.

பொறுப்பு
அடுத்து மாதவராவ் சிந்தியா.. மத்திய விமான போக்குவரத்து துறை, சுற்றுலா துறை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் உட்பட ஏராளமான பொறுப்புகளை வகித்தவர்தான் சிந்தியா.. மக்களிடன் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர்.. இவர்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்றுகூட கருதப்பட்டார்... கடந்த 2001ல் உத்தரப்பிரதேசம் அருகே விமான விபத்தில் உயிரிழந்தார்.. இதில், மார்ச் 3, 2002 -ல் ஜி.எம்.சி. மக்களவை சபாநாயகர் பாலயோகியும் விமான விபத்தில் உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications