4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

256 பேர்
இந்த 4 தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் தள்ளுபடி
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் முடிவில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

137 வேட்பாளர்கள்
152 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

63 வேட்பாளர்கள்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த 68 பேரில் 5 சுயேட்சைகள் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

3 வேட்புமனுக்கள் வாபஸ்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 41 வேட்புமனுக்களில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 3 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன.

37 பேர் போட்டி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 44 பேரில் 7 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

22 வேட்பாளர்கள் போட்டி
சூலூர் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications