கமல் போட்ட 2வது வீடியோ.. மய்யத்தின் முதல் உறுதிமொழி என்ன தெரியுமா!

மக்கள் நீதி மய்யத்தின் முதல் உறுதிமொழி சுத்தமான குடிநீர் என்று கமல் ட்வீட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்ல குடிக்கிறதுக்கு சுத்தமான தண்ணி.. அப்பறம்தான் மத்ததெல்லாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

சலசலவென கொட்டி கொண்டிருக்கும் ஆற்றுநீரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து தருவது ஒரு பக்கம்.. கண்மாய்கள், கிணறுகளை வெட்டி சுத்தப்படுத்தாமல், பெய்யும் மழைநீரையும் அதில் சேர்த்து வைக்க முடியாதது மற்றொரு பக்கம்.. என தமிழகம் திண்டாடி கிடக்கிறது. அதனால்தான் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டது!

The First Resolution of Makkal Neethi Maiyam

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

இன்றுகூட தேனிக்கு மோடி வந்துள்ள சூழ்நிலையில், அங்கு ஊர் பெண்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு குடத்தை வைத்து கொண்டு நடுரோட்டில் உட்கார்ந்துவிட்டார்கள். இதில், மழையும் பெய்து தொலைக்காத காரணத்தினால் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் வரப்போவதாக புவியியல் நம்மை மிரட்டி செல்கிறது.

இதை எல்லாம் மனதில் வைத்து மக்கள் நீதி மய்யம் தனது முதல் வாக்குறுதியை தந்துள்ளதா என தெரியவில்லை. "மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் உறுதிமொழி. ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி. வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.உங்கள் நான்" என கமல் பதிவிட்டுள்ளார்.

நம்மால் விளங்கி கொள்ள முடியாத அளவுக்கு விஞ்ஞானம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.. ஆனால் குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்லாதது நினைத்தால், வேதனையாக உள்ளது. இருந்தாலும், கலர் கலர் விளம்பரங்கள் இல்லாமல் குடிநீரை தருவோம் என்று சொன்ன கமலுக்கு வாழ்த்துக்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+