"எஸ்ஏசி பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க!" கோட் படத்தில் வாரிசுகள் மட்டுமா? கிளம்பிய விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், ட்விட்டரில் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் நெட்டிசன் ஒருவருக்கும் இடையே நடந்த விவாதம் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வாரிசுகளுக்கே வாய்ப்பு கிடைப்பதாக நெட்டிசன் மறைமுகமாக விமர்சித்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் செப். 5ம் தேதி ரிஸீல் ஆக உள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

vijay cinema

தி கோட்: இப்போது தி கோட் படத்தின் புரமேஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். விஜய் அரசியலுக்குச் செல்வதற்கு முன்பு வெளியாகும் கடைசி இரு படங்களில் ஒன்று என்பதாலும், இதில் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி சின்ன வயது விஜய்யை கொண்டு வந்துள்ளதாலும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாரிசுகள் மட்டும்: இதற்கிடையே தமிழ் சினிமாவில் வாரிசுகளுக்கு மட்டுமே பட வாய்ப்பு கிடைப்பதாக நெட்டிசன் ஒருவர் தி கோட் படத்தை வைத்து விமர்சிக்க, அதற்கு வெங்ட் பிரபு பதிலளிக்க ட்விட்டரில் விவாதமே நடந்துள்ளது. அதாவது லீ என்ற ட்விட்டர் பக்கத்தில், "எஸ்ஏசி பையன் (இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்), தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் கோட்" என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது கோட் படத்தைப் பொறுத்தவரை அதில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரின் மகன். மேலும், இதில் பிரசாந்த் (தியாகராஜன் மகன்), பிரபுதேவா (சுந்தரம் மாஸ்டர் மகன்), யுகேந்திரன் (மலேசியா வாசுதேவன் மகன்) ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இதில் யுவன் சங்கர் ராஜா (இளையராஜா மகன்) இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கங்கை அமரனின் மகன் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

சினிமாவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவதாக ஒரு பேச்சு இருக்கும் நிலையில், அதை விமர்சிக்கும் வகையிலேயே அந்த நபர் இந்த போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. கோட் என்ற ஹேஷ்டேக் உடன் அவர் ட்வீட் செய்திருந்த நிலையில், அது இயக்குநர் வெங்கட்பிரபு கண்களில் பட்டதாகத் தெரிகிறது.

வெங்கட் பிரபு பதில்: உடனே இயக்குநர் வெங்கட் பிரபு அதற்குப் பதிலும் அளித்துள்ளார்.. அதில் அவர், "தேங்க்ஸ் ப்ரோ.. உங்க அப்பா பெயரை சொல்லுங்க.. அவருக்கும் தேங்க் பண்ணிட்றேன்" என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபு போஸ்ட்டை பகிர்ந்தனர்.

டிரெண்டிங்: ஆனால், அது இத்துடன் நின்றுவிடவில்லை. வெங்கட் பிரபு போஸ்டிற்கு மீண்டும் அந்த லீ என்பவர் பதிலளித்துள்ளார். அதாவது அவர், "தேவையில்லை ப்ரோ.. நான் நேபோடிசம் பிராடக்ட் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். வெங்கட்பிரபுவுக்கும் லீ என்ற அந்த ட்விட்டர் அக்கவுண்டிற்கும் இடையே நடந்த இந்த உரையாடல் தான் இப்போது ட்விட்டரில் பற்றி எரிந்து வருகிறது. ஒரு தரப்பினர் வெங்கட் பிரபுவுக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

கடந்த சில காலமாகவே சினிமா துறையில் நேபோடிசம் விமர்சனம் இருக்கிறது. அதாவது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருப்பதால் மட்டுமே தகுதியும் திறமையும் இல்லாதவர்களுக்குக் கூட ஈஸியாகவும் தொடர்ந்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதே நேபோடிசம் ஆகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் வாரிசு அரசியல் எனச் சொல்கிறார்களே.. அதுபோல என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+