திரிபாதி "அந்த" விஷயத்தில் ரொம்ப கறாராமே.. சிலாகிக்கும் காவல்துறை.. ஒரு பிளாஷ்பேக்
Recommended Video
சென்னை: திரிபாதியை பற்றி சும்மா லேசில் எடை போட்டுவிடாதீர்கள்.. அவர் அந்த விஷயத்தில் ரொம்ப கறார் என்று சொல்லப்படுகிறது.
தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜேகே திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதி இந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
எப்பவும் இல்லாமல் இந்த முறை டிஜிபி பதவிக்கு நிறையவே போட்டி இருந்தது. லிஸ்ட் பெரிசாக போய் கொண்டே இருந்தது. இதில் 2 பேரின் பெயர்கள் விடாமல் இறுதிவரை வந்தது. ஒருவருக்கு மாநில சிபாரிசு என்றால், மற்றொருவருக்கு மத்திய சிபாரிசு என தகவல்கள் கசிந்தன.

திரிபாதி
மத்தியிலிருந்து சிபாரிசு செய்த, திரிபாதிதான் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலை கவனமாகவும், சுதந்திரமாகவும் சீர்தூக்கி பார்த்து, டிஜிபி ஆக நியமித்திருப்பதாக தமிழக அரசின் உள்துறை தெரிவித்துள்ளது.

விருதுகள்
திரிபாதி நமக்கு அறிந்த முகம்தான்.. பழக்கப்பட்ட நபர்தான்.. எத்தனையோ பதவிகளை வகித்தவர், நிறைய விருதுகளை பெற்றவர், மெச்சத்தகுந்த பணிக்காக காவல் துறையில் சிறந்த செயல்பாட்டிற்காக தங்கப் பதக்கம் முதல் ஜனாதிபதி விருது வரை வாங்கிவிட்டார்.

பாதுகாப்பு
இவரை பற்றி யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் பரபரக்கிறது. அதாவது பெண்கள் விஷயத்தில் மனுஷர் படு ஸ்டிரிக்ட்டாம். இவர் சென்னை கமிஷனராக இருந்த சமயம் அது. விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை. அதனால் நள்ளிரவு கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், திரிபாதி சாதாரண காரில், மஃப்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார்.

சூசக பேச்சு
அந்த சமயத்தில் திரிபாதியின் காரை ஒரு பெண் வழிமறிக்கவும், என்னவோ, ஏதோ என்று பதறி போய் திரிபாதி வண்டியை நிறுத்தி உள்ளார். "எங்கம்மா போகணும்" என்று திரிபாதி கேட்க, அந்த பெண்ணோ, "நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர ரெடி" என்று சூசகமாக பிட் போட்டுள்ளார்.

ஒப்படைப்பு
உஷாரான திரிபாதி, சம்பந்தப்பட்ட அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை மைக்கில் கூப்பிட்டு, பெண்ணை ஆன் தி ஸ்பாட்டில் ஒப்படைத்தாராம். இரவு நேரம், ஸ்டேஷனுக்கும் அழைத்து செல்லப் போக முடியாது என்பதால், பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் துணைக்கு அனுப்பியும் வைத்தாராம். மறுநாள் காலை பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பிறகு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டாராம்.

மனித நேயம்
திரிபாதியின் காக்கி சட்டைக்குள் கறார் தன்மை எல்லா ரூபத்திலும் இருக்கும். அதே சமயம் மனிதநேயமும் கலந்தே காணப்படும். இன்னும் 2 வருஷத்துக்கு திரிபாதி பொறுப்பில் இருக்க போகிறார். அதனால் எந்த பாச்சாவும் இனி திரிபாதிகிட்ட பலிக்காது என்கின்றனர்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications