தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்கள் பாட வேண்டும்.. இசைக்க கூடாது- தமிழ்நாடு அரசு
சென்னை : அரசு விழாக்களில் இனி தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை கருவிகளைக் கொண்டு இசைக்கக் கூடாது எனவும், பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வைக்க வேண்டுமென தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தபடும் விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதும் மரபாக உள்ளது. பல வருடங்களாக இந்த நடைமுறை உள்ளது. இசைக்கருவிகள், சீடி, கேசட் ஆகியவற்றில் பதிவு செய்து ஒலிப்பெருக்கிகள் மூலமும் ஒலிபரப்பப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சில நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை தவறாக பாடுவது, வார்த்தைகளை உளறுவது போன்றவையும் நடைபெறுவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் தமிழ்தாய் வாழ்த்து தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்து ஒலிபரப்புவதால் பல நிகழ்ச்சிகளில் வெறுமனே பங்கேற்று நிற்பதாகவும், உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை அனைவரும் பாடும் வகையில் தமிழக அரசு , அரசு நிகழ்ச்சிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது தொடர்பாக தமிழ் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசு உத்தரவு
இந்நிலையில்தான் அரசு விழாக்களில் இனி தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை கருவிகளைக் கொண்டு இசைக்கக் கூடாது எனவும், பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வைக்க வேண்டுமென தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
இதுகுறித்து அரசின் இதுதொடர்பாக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படும் இதனால் விழாவில் பங்கேற்பவர்கள் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும், இதனால் எவ்வித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வு இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து இருப்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது..

பாட வேண்டும் ஒலிபரப்பக் கூடாது
எனவே இனிவரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவினை நடத்துவோர் இதற்கான பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அரசு செயலர் மகேசன் காசிராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications