செல்போனிலேயே ஆதார் திருத்தலாம்.. சூப்பர் வசதியுடன் வருகிறது புதிய E-Aadhaar செயலி! மத்திய அரசு சபாஷ்
சென்னை: இந்தியாவில் ஆதார் சேவைகளை எளிமைப்படுத்தும் விதமாக, இந்திய அரசு மீண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.. இந்த மாற்றமானது பொதுமக்களுக்கு எளிதாகவும், உதவியாகவும் இருக்க போகிறது.. e-Aadhaar மொபைல் செயலி எனப்படும் மேம்படுத்தப்பட்ட புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.. இந்த செயலி எப்படி செயல்படும்? e-Aadhaar செயலியானது, mAadhaar செயலியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது? இந்த புதிய ஆப் வசதியினால் கிடைக்கும் நன்மை என்ன? இவைகளை பற்றி பார்ப்போம்.
ஆதார் கார்டு என்பது இன்றைய சூழலில் மிக மிக அத்தியாவசியமான ஆவணமாகிவிட்டது.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை உள்ளது..அரசு நமக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டுகள் அவசியமாகும்.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு இருந்தால்தான் முடியும்.

ஆதார் கார்டு அவசியம்
ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள், இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் அந்த அடையாளத்தை பயன்படுத்தலாம். நீங்கள் இருக்கும் ஊரிலோ அல்லது மாநிலத்திலோ மட்டும்தான் ஆதார் செல்லுபடியாகும் என்று இல்லை. நாடு முழுவதுமே இது அடையாள ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும்.ஆதார் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களை மோசடி செய்பவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால், ஆதார் அட்டையை, எப்போதுமே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்..
ஆதார் அட்டையில் திருத்தம்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் பிழை எதுவும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.. சிறு பிழைகள் இருந்தாலும், அரசின் உதவியை பெற முடியாது என்பதால், சிறு பிழையை உடனடியாக திருத்தி கொள்ள வேண்டும்.அதேபோல பெயர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களை உடனே செய்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் மூலமாக, புதிய ஆதார் பதிவு, ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. தமிழகத்திலும் எல்காட் மற்றும் தாலுகாக்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன..
வருகிறது e-Aadhaar App
எனினும், பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளதால், இதையும் எளிமைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.. ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக "e-Aadhaar App" என்ற செயலியை ஆதார் ஆணையம் கொண்டு வரப்போவதாக தெரிகிறது.
இந்த புது செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்தி கொள்ள முடியும். பிறந்த தேதி, பெயர் , எழுத்துப்பிழை, முகவரி, செல்போன் நம்பர் என விவரங்களாக இருந்தாலும், இனி ஆதார் சென்டருக்கு போக தேவையில்லை.. செல்போனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்.அதாவது பயோ மெட்ரிக் அப்டேட் தவிர மற்ற அப்டேட்களை இந்த புதிய செல்போன் ஆப் மூலமாகவே செய்து கொள்ள முடியும்.
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
இந்த e-Aadhaar செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், முகஅடையாளம், கைரேகை மூலம் பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படுகிறது.. இதனால் தரவு பாதுகாப்பும் கூடுதல் வலுவடைவதுடன், ஆதார் மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பபப்டுகிறது.
mAadhaar, e-Aadhaar இந்த இரண்டு செயலிக்கும் வித்தியாசம் உள்ளது.. mAadhaar செயலில் ஆதார் விவரங்களை பார்க்க்கவும், டிஜிட்டல் கார்டுகளை சேமிக்கவும் மட்டுமே முடிந்தது.. ஆனால் இந்த புதிய e-Aadhaar செயலியில் திருத்தம் செய்து கொள்வதற்கான வசதி கொண்டுவரப்பட்டுப்பட்டுள்ளது.ட
ஆண்டிராயிடு மற்றும் iOS இரண்டிலும் e-Aadhaar ஆப் வசதி கிடைக்கும்... சாதாரண பயனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செயலியை UIDAI வடிவமைத்து வருகிறதாம். இன்னும் 2 மாதத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications