மிதக்கும் ரெஸ்டாரண்ட்! சென்னைக்கு வரப்போகும் சூப்பர் உணவகம்.. வெளிநாடுகளை மிஞ்சும்.. சூப்பர் வசதி!
சென்னை: வில்லிவாக்கத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான ஏரி ஒன்று நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இதனை பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிடப்டடப்டது.
கடந்த 2019ல் அப்போதைய அதிமுக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதி முடிவுற இருக்கிறது.
இது வரும் 2023 ஏப்ரலில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சென்னை வாசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு
சென்னை பெருநகரம் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்களால் நிரம்பி வழிந்து வருகிறது. பிரதான நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என சென்னை மூச்சடைத்து நிற்கிறது. இங்குள்ள மக்கள் நினைவில் காடுள்ள விலங்குகளை போல தங்கள் சொந்த ஊரின் மண் வாசனை நினைவில் கொண்டு நாட்களை கடத்தி வருகின்றனர். உழைத்து ஓடாய் தேயும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது இன்றியமையாததாக இருக்கிறது.

பூங்கா
அந்த வகையில் சென்னையில் ஏகப்பட்ட பூங்காக்கள் இருக்கின்றன. ஆனால் நீர் நிலை கொண்ட பூங்காக்கள் என்றால் அது மிகவும் குறைவுதான். விதி விலக்காக நகரத்திற்குள் சேத்துப்பட்டு பூங்கா நீர் நிலையுடன் அமைந்திருக்க, இது போன்ற மற்ற பூங்காக்கள் புறநகர் பகுதியில்தான் அமைந்திருக்கிறது. தற்போது சென்னை மக்களின் கனவுகளை நனவாக்கும் விதமாக மற்றொரு நீர்நிலை பூங்கா வில்லிவாக்கத்தில் அமைந்து வருகிறது.

வில்லிவாக்கம்
மேலே குறிப்பிட்டதைப்போல கடந்த 2019ல் இரண்டு கட்டங்களாக தொடங்கப்பட்ட இந்த பணியின் ஒரு கட்டம் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. வியாழக்கிழமையான நேற்று ஜல் சக்தி அபியான் (JSA), இணைச் செயலர் செந்தில்பாண்டியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த பூங்காவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி இரண்டு பகுதியாக (தொட்டிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதிய பிரதானமானதாகும்.

புதிய அம்சங்கள்
முதல் பகுதியில் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள 40 தெருக்களில் தேங்கும் மழைநீர் இந்த தொட்டிக்கு வந்து சேரும். அந்தவகையில் இந்த ஏரி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த பூங்காவில் பல புதிய அம்சங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த குளத்தில் படகு சாவாரி செய்ய முதற்கட்டமாக 30 படகுகள் விடப்படும். அதேபோல மிதக்கும் உணவகம் அமைக்கப்படும். மேலும், 12டி தியேட்டர், ஸ்னோ வோல்டு ஆகியவையும் அமைகின்றன.

குடியிருப்புகள் அகற்றம்
இந்த பூங்கா கட்டுமான பணிக்காக 150 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. அதேபோல 100 குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக இங்கு வாழ்ந்த மக்களை புறநகர் பகுதியில் எங்கோ தூக்கி வீசும் செயலை எந்த அரசு வந்தாலும் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஏரியை பொருத்த அளவில், அதன் தூய்மை தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உபரி நீர்
ஒரு வேலை இந்த ஏரிய நிரம்பினால் இங்கிருந்து தண்ணீர் TVS கால்வாய் வழியாக வெளியேற்றப்படும். அதேபோல இங்கு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படியாயினும், இது சென்னை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications