பில்கிஸ் பானு வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்றிய குஜராத் அரசு!‘தராசு’ ஷ்யாம்
சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீப்பு வழங்கி உள்ளது.
உலக அளவில் பேசப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுவித்திருந்தது. குற்றவாளிகள் மன்னிப்பு கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு இந்த முடிவை எடுத்திருந்தது.

ஆனால், அதனை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பு உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கைக் கொண்டு சென்றது. அதனை விசாரித்து வந்த நீதிமன்றம் 11 குற்றவாளிகளின் விடுதலையும் செல்லாது என்று தீர்ப்பளித்தது.
குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம். கூடவே நீதிமன்றத்தை ஏமாற்றி மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் மோசடி செய்துள்ளன எனக் கடுமையான வார்த்தைகளைத் தீர்ப்பில் கூறியுள்ளது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

"ராமர் கோயிலைத் திறப்பதன் மூலம் ராம ராஜ்ஜியம் பற்றி விவாதத்தை நாடு முழுவதும் பரப்ப நினைத்தது பாஜக அரசு. ஆனால், உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பு மூலம் அந்த அரசியல் விவாதத்தைத் திசை மாற்றி இருக்கிறது. இப்போது நாடே பில்கிஸ் பானு தீர்ப்பைத்தான் பேசி வருகிறார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் 'தராசு' ஷ்யாம்.
மேலும் அவர் இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு என்ன மாதிரியான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறார்.
"குஜராத் அரசும் மத்திய அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தீர்ப்பைத் தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது சரியான சம்மட்டி அடி.அதில் சந்தேகமே இல்லை. குஜராத் அரசும் மத்திய உள்துறையும் நடத்தி இருப்பது இந்திய அரசியல் சாசனத்தின் மீது நடத்தி இருக்கின்ற மோசடி என்று கூறியுள்ளது.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய பிறகு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அரசுகளாக இந்த இரண்டு அரசுகளும் இருந்திருந்தால் உடனடியாக ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.
தண்டனை வழங்கப்பட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில். ஆனால், குற்றம் நடந்ததோ குஜராத் மாநிலத்தில். இந்த வழக்கில் தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? இதுதான் முக்கியமான கேள்வி.
இந்த பில்கிஸ் பானு வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.
ராஜிவ் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன் வழக்கில் நமது அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதில் Aprovepart court என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவுபடுத்தி இருந்தது.

குற்றம் நடந்த இடத்தில் உள்ள மாநில அரசு என்பது Aprovepart court கிடையாது. எங்கு விசாரணை நடத்தப்பட்டு எங்குத் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதுதான் Aprovepart court என்பதை உறுதி செய்திருந்தது. அதுதான் ராஜிவ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம்சம்.
ஆனால், அந்தத் தீர்ப்பையே புறக்கணித்துவிட்டு, குஜராத் அரசு தண்டனைக் குறைப்பைச் செய்தது. அது எப்படி? என பில்கிஸ் பானு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் ராகரத்னா அம்மையார்.
குஜராத் அரசும் மத்திய உள்துறையும் முழுமையாக வழங்கு சார்ந்த விவரங்களை எல்லாம் மறைத்து, உச்சநீதிமன்றத்திலேயே தவறான தகவல் களை சமர்ப்பித்துள்ளன.
நீதிமன்றத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்தால் அது தண்டைக்குரிய குற்றம். அப்படி தவறான குற்றங்களை இந்த இரு தரப்பும் சமர்ப்பித்துள்ளன. அதன்மூலம் நீதிமன்றத்தையே ஏமாற்றி, குஜராத் அரசு தண்டனை குறைப்பைத் தரலாம் என்று ஒரு உத்தரவைப் பெற்றுள்ளனர். எனவேதான் 2022இல் தண்டனைக் குறைப்பு தரப்பட்டது.
அந்த உத்தரவில் ஆவணங்களை எல்லாம் திருத்தி இருக்கிறார்கள். எனவே அந்த உத்தரவு பொருந்தாது. மேலும் இது இந்திய அரசியல் சாசனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மோசடி இது.

தனிப்பட்ட சுதந்தரம் உயர்ந்ததா? அல்லது சட்டத்தின் ஆட்சி உயர்ந்ததா? என்பதற்கான கேள்வியை இந்தத் தீர்ப்பு எழுப்பி உள்ளது. சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன? உரிய நடைமுறைகள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். இது மூன்று கூறுகளால் ஆனது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம்.
அப்படி என்றால் சட்டத்தின் பார்வையில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் சமம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பைச் சட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
தனிப்பட்ட சுதந்தரம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. அந்தச் சட்டத்தின் ஆட்சியையே ஏமாற்றி, குஜராத் அரசு குற்றவாளிகளைத் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது. எனவே தனிமனித சுதந்தரம் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றுத்தான் நாங்கள் விடுதலை செய்தோம் என்று குஜராத் அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் அந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் சொன்னதற்கு, இரண்டு அரசுகளும் அதைச் சமர்ப்பிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறி இருந்தது. அதையும் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் கண்டித்துள்ளது.
எனவே இரண்டு வாரங்கள் கால அவகாசம். அதற்குள் குற்றவாளிகள் சிறைக்குத் திரும்பி ஆகவேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது" என்று கூறுகிறார்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications