ஆப் லோன்.. உங்களால் இஎம்ஐ கட்ட முடியவில்லை.. அடுத்து என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சென்னை: ஆப் லோன்களில் கடன் வாங்க வேண்டிய நிலை தான் இருக்கிறது என்றால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. ஏனெனில் வங்கிகளில் கடன் வாங்க முடியாமல், தங்க நகை எதையும் அடகு வைக்க முடியாத நிலை, அவசரத்திற்கு நண்பர்களிடம் கை மாற்று வாங்க முடியாத நிலை என போன்ற சூழல்கள் காரணமாகவே நீங்கள் ஆப் லோனை நாடியிருப்பீர்கள். அப்படியான சூழலில் நீங்கள் ஆப் லோனில் கடன் வாங்குறீங்க என்றால், சில விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவமானம் தான் மிச்சம் வரும்.
ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்களில் தான் கடன் வாங்க வேண்டும். அந்த ஆப் ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் உள்ளதா என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். ஆப்பில் கடன் வாங்கும் முன்பு சிபில் நன்றாக உள்ளது என்றால், வங்கியிலேயே முயற்சி செய்யலாம். ஏனெனில் வங்கியில் தனிநபர் கடன் வாங்கினால், வட்டி மிக குறைவு. 11 முதல் அதிகபட்சம் 16 சதவீதம் வரை தான் இருக்கும். ஆனால் நீங்கள் தனிநபர் கடனை ஆப்களில் வாங்கினால் 18 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும்.

ஆப் லோன் கடன்கள் எப்படி வழங்கப்படுகிறது
ஆப் லோன்கள் கடன்களை பொறுத்தவரை அந்த நிறுவனங்கள் ஓரளவு பணம் வைத்திருக்கும். அவர்களுடன் பங்குதாரர்களான பிரபல தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் இணைந்து செயல்படும். அவை, ஒரு தனிநபரின் பான் விவரங்களை சோதிக்கும். அவர் ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக செலுத்தியவர், நல்ல நிதி நிலைமை உள்ளவர் என்றால் மட்டுமே கடனை தரும்.
நல்ல சிபில் இருந்து, அதிக கடன் இருந்தாலும் தர மாட்டார்கள். ஒருவேளை அவர்களால் கடனை திரும்ப செலுத்த முடியும் என்று ஆப்கள் நம்பினால் மட்டுமே கடனை ரிஸ்க் எடுத்து தருவார்கள். அந்த கடனை முறையாக செலுத்தினால் அடுத்தடுத்து கடன் தருவார்கள். kreditbee, easy salary போன்றவை அங்கீகரிப்பட்ட ஆப் லோன்கள் ஆகும்.மற்றவை அங்கீகரிக்ப்பட்டவையா என்பதை பார்த்து உறுதி செய்யுங்கள்.
அதேநேரம் வங்கிகளில் கடன் வாங்க முடியாமல், தங்க நகை எதையும் அடகு வைக்க முடியாத நிலை, அவசரத்திற்கு நண்பர்களிடம் கை மாற்று வாங்க முடியாத நிலை என போன்ற சூழல்கள் காரணமாகவே ஆப் லோனை பலர் நாடுகிறார்கள். அப்படி நாடுபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், மிக குறைந்த கடன் வாங்கலாம்.அதனையும் உடனே செலுத்திவிடுவது நல்லது.
முடிந்தவரை தங்கத்தை வைத்து கடன் வாங்கி திரும்ப செலுத்த முயற்சி செய்யுங்கள். வேறுவழியே இல்லை என்றால் மட்டுமே ஆப் லோன்கள் பக்கம் போகலாம்.. ஏனெனில் வட்டி மிக கடுமையாக இருக்கும். கந்துவட்டியை பகிரங்கமாகவசூலிப்பது போன்ற முறை தான் ஆப் லோன். கந்துவட்டிக்காரர்கள் போல் ஆப் லோன் தருபவர்கள் நடந்து கொள்வார்கள்.
மாதம் மாதம் சரியாக இஎம்ஐ கட்ட முடியும் என்றால் மட்டுமே ஆப் லோனில் கடன் வாங்குங்கள். உங்களால் இஎம்ஐ கட்ட முடியாது அல்லது சந்தேகம் இருந்தால் கூட ஆப் லோனில் கடன் வாங்க வேண்டாம். மிககுறைந்த இஎம்ஐயை முடிந்தவரை தேர்வு செய்யுங்கள். அதிக இஎம்ஐ போட்டால் வட்டியும் மிக அதிகமாக இருக்கும்.
அதேபோல் கடனை கட்ட முடியாவிட்டால், உங்கள் அனைத்து விவரங்களும் அவர்களிடம் இருக்கும்.. அவர்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு போனில் அழைத்து கடனை உடனே கட்ட சொல்லி வற்புறுத்துவார்கள். உங்களால் கடனை கட்ட முடியாத நிலை இருந்தால், அதனை கூறி அசிங்கப்படுத்துவார்கள்.
சில ஆப்கள், வாட்ஸ் அப்களில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு நீங்கள் கடனை கட்டாமல ஏமாற்றும் தகவலை கூறி உடனே கடனை கட்ட வலியுறுத்துமாறு கூறுவார்கள். அத்துடன் அபராத வட்டி மிகஅதிகமாக போடுவார்கள். அத்துடன் உங்கள் சிபிலையும் மோசமாக காலி செய்துவிடுவார்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் எந்த கடனும் எதிலும் கிடைக்காமல் போகும்.
எனினும் இப்படியான சூழலை எதிர்கொண்டால்,பயப்படமால் ஆப்லோன்களை அணுகுங்கள். உங்களால் கடனை கட்ட முடியாத நிலையை எடுத்து சொல்லி, வட்டி, அபராதங்களை தள்ளுபடி செய்யுமாறு கூறலாம். அவர்களை பொறுத்தவரை அசல் வந்தாலே போதும் என நினைப்பார்கள். இந்த சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடிதம் மூலமாக அல்லது மெயில் மூலமாக நிலைமையை கூறி, சில மாதங்கள் தவணை கேட்கலாம்.
வங்கிகள் 50000க்குள் என்றால் பெரிய அளவில் நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு குறைவு. அதேநேரம் 2 லட்சம் போன்ற தொகையை வசூலிக்க லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது ஒரு கிரிமினல் வழக்கு அல்ல, ஒரு சமரசக் கூட்டம் ஆகும். நீதிபதி முன்னிலையில் நீங்கள் உங்கள் நிலையை விளக்கினால், வட்டி மற்றும் அபராதத்தை பெருமளவு குறைத்து, நீங்கள் கட்டக்கூடிய ஒரு தொகையை நிர்ணயிப்பார்கள். இது உங்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.
தனிநபர் கடனுக்காக அவர்கள் உங்கள் வீட்டுப் பத்திரத்தையோ அல்லது சொத்துக்களையோ ஜப்தி செய்ய முடியாது. ஏனெனில் இது பிணையில்லாத கடன் . அவர்கள் உங்கள் மீது சிவில் வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பக் கேட்க மட்டுமே முடியும். நீங்கள் போனை ஆஃப் செய்யாமல், நிறுவனத்தின் அழைப்புகளை ஏற்று "என்னால் தற்போது முடியாது, கால அவகாசம் வேண்டும்" என்று உறுதியாகக் கூறச் சொல்லுங்கள்.
அவர்கள் மிரட்டினால் அந்த ஆடியோ/வீடியோக்களைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு உதவும்.












Click it and Unblock the Notifications