செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி! கையில் கடிதத்துடன்.. ஆளுநர் மாளிகைக்கு போன விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் விரைவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். அதேநேரம் செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி வழங்கப்பட இருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. அதேபோல, விசிக மற்றும் இடதுசாரிகளிடமும் விஜய் தரப்பில் ஆதரவு கேட்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக இன்று ஆளுநரை விஜய் சந்தித்திருக்கிறார். முதலில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார். அதனை தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்கும். பின்னர் சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பார்.
முன்னதாக யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்க உள்ளதாகவும், தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அத்துடன் சட்டப்பேரவை முன்னவராகவும் செங்கோட்டையன் செயல்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications