லோக்சபா தொகுதிகள் கூடினால் தமிழ்நாடு எப்படி பாதிக்கப்படும்? ஈஸியாக புரிஞ்சிக்க லட்டு உதாரணம்
சென்னை: தொகுதி மறுவரையறுப்பால் தமிழ்நாட்டுக்கும்தானே லோக்சபா இடங்கள் கூடுகிறது, பிறகு ஏன் அச்சம் என்று நாடாளுமன்றத்தில் இன்று அமித் ஷா கூறியுள்ளார். "எந்த மாநிலத்தின் இடங்களும் குறையாது, மாறாக தமிழகத்திற்கு இடங்கள் கூடும் (39-லிருந்து 59 ஆக)" என்று கூறுகிறார். இது உண்மையாகத் தெரிந்தாலும், இதில் ஒரு அதாவது, ஒட்டுமொத்த நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 543-லிருந்து சுமார் 815-850 ஆக உயரும்போது, தமிழகத்தின் இப்போது 543-ல் 39 என்பது 7.1%. புதிய முறையில் 815-ல் 59 என்பது 7.2% (பெரிய மாற்றம் இல்லை).
ஆனால், இதே கணக்கில் உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு இடங்களை ஒதுக்கினால், அவர்களின் பங்கு 14% லிருந்து 18% வரை உயரும்.

"லட்டுப் பங்கு"
இதை ஒரு திருமணப் பந்தி உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்:
ஒரு பந்தியில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் என்ற இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.
1.பழைய நிலை: தட்டில் மொத்தம் 10 லட்டுகள் இருக்கின்றன.
- தமிழகத்திற்கு 2 லட்டுகள் கிடைக்கிறது (20% பங்கு).
- உ.பி-க்கு 4 லட்டுகள் கிடைக்கிறது (40% பங்கு).
2.புதிய நிலை (அமித் ஷா சொல்வது): "யார் லட்டையும் நான் பறிக்க மாட்டேன், எல்லாருக்கும் லட்டை கூட்டப்போகிறேன்" என்று சொல்லி, மொத்தம் 100 லட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.
- இப்போது தமிழகத்திற்கு 5 லட்டுகள் தரப்படுகிறது. (முன்பு 2 இருந்தது, இப்போது 5 ஆகிவிட்டது. எனவே தமிழகத்திற்கு "நல்லது" நடந்தது போலத் தெரியும்).
- ஆனால், அதே நேரத்தில் உ.பி-க்கு 60 லட்டுகள் தரப்படுகிறது.
இப்போது என்ன நடக்கும்?
முன்பு 10 லட்டு இருந்தபோது, உ.பி-யை விட தமிழகம் 2 லட்டுதான் குறைவாக இருந்தது. இப்போது 100 லட்டு வந்த பிறகு, உ.பி-க்கும் தமிழகத்திற்கும் இடையிலான இடைவெளி 55 லட்டுகள் ஆகிவிட்டது.
அதாவது, "உனக்கு 2-லிருந்து 5 ஆகக் கூட்டிவிட்டேனே" என்று தமிழகத்தைப் பார்த்துச் சிரிப்பது, பக்கத்துத் தட்டில் இருப்பவருக்கு 60 லட்டுகளைக் கொடுத்துவிட்டு, அவரைப் பந்தியில் "மகாராஜாவாக" அமர வைப்பது போன்றது.
தமிழகத்தின் வாதம்
நாங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேறியதற்காக எங்களுக்குக் கூடுதல் லட்டு கிடைக்க வேண்டாமா? ஆனால் "யார் அதிக குழந்தைகளைப் பெற்றார்களோ, அவர்களுக்குத்தான் அதிக லட்டு" என்று சொல்வது, சரியாகச் செயல்பட்ட மாநிலத்தைத் தண்டிப்பது போலாகும்.
சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை கூடினாலும், டெல்லியில் நம்முடைய "குரல் வலிமை" (Voting Power) வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது பாதியாகக் குறைந்துவிடும். இதுதான் "கூடுவது போலக் காட்டி ஏமாற்றுவது" என்பதாகும்.













Click it and Unblock the Notifications