பழைய கேஸ்களை தூசு தட்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! என்னென்ன வழக்குகள்? கலங்கும் திமுக, அதிமுக
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கும் வழக்குகள் என்னென்ன தெரியுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி , எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முதல் விசாரணை நடத்துகிறார். அது போல் அதிமுகவினரின் வழக்குகளையும் அவரே விசாரிக்கிறார்.

இதனால் திமுக, அதிமுக மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை அவர் கையில் எடுத்துள்ளார். அப்படி அவர் என்னென்ன வழக்குகளை கையில் எடுத்துள்ளார் தெரியுமா?
பொன்முடி: தமிழக அமைச்சராக இருந்த பொன்முடி மீதான இரு சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2006- 2011 ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அது போல் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலைச் செய்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ் வழக்கு: 2006ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தால் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் தாமாக முன் வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர்: 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் மீதான வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அமைச்சர் ஐ பெரியசாமி: 2006 முதல் 2011 ஆம் ஆண்டு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார். இவர் 2008ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக அமைச்சர் பெரியசாமி ஒதுக்கினார். 2012 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை தொடர்ந்தது. இதில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதமே பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வழக்கு: 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கையும் மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த், தாமாக முன் வந்து எடுத்துள்ளார்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications