சென்னை: சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தீவுத்திடல் பொருட்காட்சி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் எவ்வளவு? உள்ளே என்னென்ன இருக்கும்? போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி வந்துவிட்டால் கோடைக்காலம் தொடங்க போகிறது என்று அர்த்தம். கோடை என்றாலே விடுமுறைதானே? எனவே எல்லோரும் இப்போதே பயணத்திற்கான திட்டமிடலை தொடங்கியிருப்பார்கள். என்ன இருந்தாலும், அதிகபட்சம் 5-7 நாட்கள் வரை மட்டுமே வெளியூரில் சுற்றுலா செல்ல முடியும். மீதியுள்ள நாட்களில் சொந்த ஊரில்தான் கழித்தாக வேண்டும். சென்னை மக்களுக்கும் இதே நிலைதான். ஆனால், இம்மக்களின் கொண்டாட்டத்தை நீட்டிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் தீவுத்திடல் பொருட்காட்சிதான் அது.
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ள இந்த பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கியுள்ளது. இது 71 நாட்கள் வரை நடக்கும். அதாவது மார்ச் மாதம் 3ம் வாரம் வரை இந்த பொருட்காட்சியை கண்டு ரசிக்க முடியும். பொருட்காட்சியின் வாயிலில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பங்கள், திருவாரூர் தேர் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர பொருட்காட்சியின் உள்ளே, பல்வேறு கோயில்களின் மாதிரிகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் காவல் துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகள், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, ஆவின், காதி, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளின் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விளையாட்டுகளை பொறுத்த அளவில், பெரியவர்களுகாக பிரம்மாண்ட ராட்டினம், காற்றில் பறக்கும் கப்பல் என மெய் சிலர்க்க வைக்கும் பல்வேறு விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதேபோல குழந்தைகளுக்கும் தனித்தனி விளையாட்டுக்கள் இருக்கின்றன. இது தவிர புதிய அனுபவத்தை கொடுக்கும் ஸ்நோ வேர்ல்ட், பேய் வீடு, வாட்டர் ரோலர் என வித்தியாசமான விளையாட்டுகளும் இருக்கின்றன.
மேலும், சாப்பிடுவதற்கான கடைகளும் அதிக அளவில் இருக்கின்றன. இளநீர் தொடங்கி பீட்சா வரை அனைத்து வகையான உணவுகளும், நொறுக்கு தீனிகளும் இங்கு கிடைக்கும். டிக்கெட்டுகளை பொறுத்த அளவில், ஆன்லைன் முன்பதிவு கிடையாது. நேரில் சென்றுதான் டிக்கெட்டை வாங்க வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.40, சிறார்களுக்கு ரூ.25 மற்றும் மாணவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
சென்னை: சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தீவுத்திடல் பொருட்காட்சி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் எவ்வளவு? உள்ளே என்னென்ன இருக்கும்? போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.ஜனவரி வந்துவிட்டால் கோடைக்காலம் தொடங்க போகிறது என்று அர்த்தம். கோடை என்றாலே விடுமுறைதானே? எனவே எல்லோரும் இப்போதே பயணத்திற்கான திட்டமிடலை தொடங்கியிருப்பார்கள். என்ன இருந்தாலும், அதிகபட்சம் 5-7 நாட்கள் வரை மட்டுமே வெளியூரில் சுற்றுலா செல்ல முடியும். மீதியுள்ள நாட்களில் சொந்த ஊரில்தான் கழித்தாக வேண்டும். சென்னை மக்களுக்கும் இதே நிலைதான். ஆனால், இம்மக்களின் கொண்டாட்டத்தை நீட்டிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் தீவுத்திடல் பொருட்காட்சிதான் அது.சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ள இந்த பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கியுள்ளது. இது 71 நாட்கள் வரை நடக்கும். அதாவது மார்ச் மாதம் 3ம் வாரம் வரை இந்த பொருட்காட்சியை கண்டு ரசிக்க முடியும். பொருட்காட்சியின் வாயிலில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பங்கள், திருவாரூர் தேர் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.இது தவிர பொருட்காட்சியின் உள்ளே, பல்வேறு கோயில்களின் மாதிரிகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் காவல் துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகள், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, ஆவின், காதி, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளின் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.விளையாட்டுகளை பொறுத்த அளவில், பெரியவர்களுகாக பிரம்மாண்ட ராட்டினம், காற்றில் பறக்கும் கப்பல் என மெய் சிலர்க்க வைக்கும் பல்வேறு விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதேபோல குழந்தைகளுக்கும் தனித்தனி விளையாட்டுக்கள் இருக்கின்றன. இது தவிர புதிய அனுபவத்தை கொடுக்கும் ஸ்நோ வேர்ல்ட், பேய் வீடு, வாட்டர் ரோலர் என வித்தியாசமான விளையாட்டுகளும் இருக்கின்றன.மேலும், சாப்பிடுவதற்கான கடைகளும் அதிக அளவில் இருக்கின்றன. இளநீர் தொடங்கி பீட்சா வரை அனைத்து வகையான உணவுகளும், நொறுக்கு தீனிகளும் இங்கு கிடைக்கும். டிக்கெட்டுகளை பொறுத்த அளவில், ஆன்லைன் முன்பதிவு கிடையாது. நேரில் சென்றுதான் டிக்கெட்டை வாங்க வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.40, சிறார்களுக்கு ரூ.25 மற்றும் மாணவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். The Theevu thidal Exhibition, which the people of Chennai have been waiting for a long time, has now started. How much is the entry fee for this? What will be inside? Such details have been released.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.