Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் குண்டர்னு தெரிஞ்சுக்கனும்..சர்வ சாதாரணமாக குண்டர் சட்டம் போடக் கூடாது! கண்டித்த நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு யார் குண்டர்கள் என்பதை தீவிரமாக சிந்திக்க வேண்டும், யார் மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும், குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

செல்வராஜ் என்பவர் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Goondas act Police high court

விசாரணையின் போது, மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டு,ரூ.3.30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் மனுதாரர் உதவியுடன் மோசடி நடைபெற்றதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் மனுதாரர் போடப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுபோன்ற தனி நபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கனடனம் தெரிவித்தனர்.

மேலும்," தமிழக அரசு யார் குண்டர்கள் என்பதை தீவிரமாக சிந்திக்க வேண்டும், யார் மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும், குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+