அடுத்தடுத்து.. தமிழக போலீசாருக்கு குட்டு வைக்கும் நீதிமன்றம்.. என்ன நடக்கிறது?
சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் கொடுமை சம்பவங்களில் காவல் துறை மீது நம்பிக்கையில்லை என்று கூறி சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கையும் சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது, காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், சிறுவனின் பெயரைப் புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தனர். வழக்கின் விசாரணையின்போது போக்சோ வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும், வழக்கின் விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் போக்சோ விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை லிப்ட் அருகே வைத்து சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தது தவறு, சிறுமியின் பெற்றோர் முறையாக நடத்தப்படவில்லை என்று கூறி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கில் காவல் துறை விசாரணையின் மீது சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது என்பது அவர்கள் தரப்பு வாதங்கள் மூலம் தெரியவருகிறது. அதற்கு உரிய காரணம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தனர்.
அதேபோல, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களுடன் கூடிய எஃஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமக முன்வந்து எடுத்து விசாரித்தனர்.
அப்போது, இவ்வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டது. அண்ணா பல்கலை வழக்கிலும் போலீஸ் மீது நம்பிக்கையில்லை என்று கூறி சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்தது.
இதேபோல, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. மாநிலம் முழுவதும் ராஜேந்திர பாலாஜி மொத்தம் 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறார். அதனால் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் காவல் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. காவல்துறைக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு நேரம் இல்லை. எனவே, இந்த வழக்கை இனி சிபிஐ விசாரிக்கட்டும். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் காவல் துறை இருந்தாலும் கூட குற்றச் சம்பவங்களின் மீதனா நடவடிக்கைகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், அதிருப்தியடையும் நீதிபதிகள் ஒவ்வொரு வழக்குகளையும்ம் சிபிஐயிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஸ்கார்லாந்து யார்டுக்கு நிகராக புகழப்பட்ட தமிழக காவல் துறைக்கு இது கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே, சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு நீதிமன்ற பாராட்டுகளை வாங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications