Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா சூப்பர்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த 'ஜில்' அப்டேட்! வேலூரே குளிர போகுதுன்னா பாத்துக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தாலும், வெப்பம் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே வரை வெயில் வாட்டி எடுத்துவிடும். இந்த ஆண்டும் இதேபோலதான் வெயில் பதிவாகியிருந்தது. ஆனால் அக்னி வெயில் முடிந்து மே மாதம் முடிந்த பின்னரும் கூட சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இருப்பினும் வெப்பம் குறைந்தபாடில்லை.

The Meteorological Department has announced that there is a chance of moderate rain at some places in Tamil Nadu in the next few days

கூலி வேலை செய்பவர்கள் தொடங்கி ஐ.டி ஊழியர்கள் வரை வெயிலில் தலைகாட்டவே பயந்தனர். இந்நிலையில் வானிலை ஆய்வும் மையம் 'ஜில்' அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதுதான் இந்த அறிவிப்பு.

"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, (ஜூன்.17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (ஜூன்.18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இன்றும் நாளையும் (ஜூன் 16,17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

ஜூன் 19ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 20ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 (105 டிகிரி பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று (ஜூன் 16) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (ஜூன்.17) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேல் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்" என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+