விஜய் அடுத்து என்ன செய்வார்? அவருக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன? களம் சாதகமா? - ஒரு ஆழமான அலசல்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால், இந்த ஆரவாரங்களுக்கு அப்பால் ஒரு 'கழுகு பார்வையில்' கட்சியை உற்று நோக்கினால், பலவீனமான அடித்தளமும் தெளிவற்ற வியூகங்களும் புலப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் அரசியல் குறித்து முன்வைக்கப்படும் 6 முக்கிய கேள்விகள் இதோ:
1. கைகொடுக்காத கூட்டணிகள்
தேர்தல் நெருங்கும் வேளையில், எந்தவொரு குறிப்பிடத்தக்க பெரிய அல்லது சிறிய கட்சியும் தவெக-வுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. தமிழக அரசியலில் தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது திராவிட ஜாம்பவான்களுக்கே சவாலான காரியம் என்னும்போது, கூட்டணிகள் இல்லாதது விஜய்க்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
2. இரண்டாம் கட்டத் தலைவர்கள் பற்றாக்குறை
அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தவிர, வேறு எந்தப் பெரிய அரசியல் ஆளுமைகளும் விஜய்யின் பின்னால் வரவில்லை. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லாத ஒரு கட்சி, தேர்தல் களத்தில் வெறும் ரசிகர் மன்றமாகவே காட்சியளிக்கும் அபாயம் உள்ளது. நாஞ்சில் சம்பத்தை மேடை பேச்சை தவிர.. அரசியல் ரீதியாக பெரிய பலன் தர மாட்டார்.

3. தெளிவற்ற கொள்கை 'கலவை'
விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன என்பதை இதுவரை தெளிவாக வரையறுக்கவில்லை. அம்பேத்கர் முதல் வேலு நாச்சியார் வரை பல தலைவர்களின் படங்களை அவர் பயன்படுத்துகிறார். ஆனால், எதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்? அவரது கட்சியின் சித்தாந்தம் என்ன? என்பதற்குப் பதில் இல்லை. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பது குரல்.. கொள்கை அல்ல. இது ஒரு கொள்கை சார்ந்த கட்சி என்பதை விட, 'எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்க வேண்டும்' என்ற முயற்சியாகவேத் தெரிகிறது.
4. நிதி ஆதாரம் யாருடையது?
விஜய்யின் பிரம்மாண்ட பிரச்சாரங்களுக்குப் பின்னால் இருக்கும் பணபலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே இவ்வளவு பெரிய செலவுகளைச் செய்ய முடியாது. விஜய் தனது சொந்தப் பணத்தை இதில் முதலீடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்தப் பணத்தின் பின்னணி என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
5. தரைமட்ட அரசியல் சவால்
இளைஞர்கள், பெண்கள், தலித் மற்றும் கிறிஸ்துவ சமூகத்தின் ஒரு பகுதியினர் ஒரு மாற்று முகமாக விஜய்யைப் பார்க்க உற்சாகமாக இருக்கலாம். ஆனால், பல தசாப்தங்களாகக் கிளைக் கழகங்கள் வைத்திருக்கும் திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து, தவெக வேட்பாளர்கள் களத்தில் எப்படிப் பணியாற்றுவார்கள்? வெறும் சமூக வலைதள உற்சாகம் வாக்குகளாக மாறுமா?
6. 'ஹெலிகாப்டர்' அரசியல் மக்களிடம் எடுபடுமா?
வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் ஒரு தலைவர், மக்களை எப்படிச் சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டங்களுக்கு பிரைவேட் ஜெட்டில், ஹெலிகாப்டரில் வந்து செல்வது மட்டும் போதுமா? மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் களத்தில் நின்று போராடாமல், தேர்தலுக்கு மட்டும் மேடை ஏறுபவர்களைத் தமிழக மக்கள் ஏற்பார்களா?
இதற்கு முன் பல தலைவர்களுக்கு இப்படி கூட்டம் வந்திருக்கிறது. அவரது கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். ஆனால், அவர்கள் யாரும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது வெறும் ரசனைக்காக வந்த கூட்டம். விஜய்யின் கூட்டத்திற்கும் இது பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் ஒரு கட்சியின் முகத்தைப் பார்ப்பதற்கு முன், அதன் கொள்கை மற்றும் வேட்பாளரின் தகுதியைக் கணிப்பதில் வல்லவர்கள். எனவே, விஜய் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று இப்போதே கூறிவிட முடியாது.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications