அரசுக்கு அடுத்த குடைச்சல்! ஆசிரியர்களை தொடர்ந்து செவிலியர்கள் போராட்டம்! என்ன தான் கோரிக்கை?
சென்னை: ஆசிரியர்கள் போராட்டம் ஒரு வழியாக ஓய்ந்த நிலையில் அடுத்ததாக செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கும் பெரும் குடைச்சல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்த 1,000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அதிகாலை 5 மணி முதலே சென்னை தேனாம்பேடை வளாகத்தில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனிடையே எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசுக்கு முன் வைக்கும் 11 அம்ச கோரிக்கைகள் பின் வருமாறு;

1. திமுக தேர்தல் வாக்குறுதி 356-ல் குறிப்பிட்டது போல் MRB செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடுக.
2. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப NMC மற்றும் IPHS பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்கிடுக.
3. 11 புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுக.
4. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முறையாக பணி இடமாற்ற கலந்தாய்வு நடத்திடுக.
5. Mentor Staff Nurse-பணியிடங்களை சரண் செய்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிடங்களை உருவாக்குவதை கைவிடுக.
6. கொரோனா கால கட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிடுக.
7. காலமுறை ஊதியத்தில் ஈர்க்கப்பட்ட செவிலியர்களை பணிவரன் முறை செய்திடுக.
8. உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18000 கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கும் வழங்கிதிக
9. ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்திடுக
10. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கிடுக.
11. செவிலியர்களுக்கு தொடர்பில்லாத Online Report களை திணிப்பதை கைவிடுக. மேற்கண்ட 11 கோரிக்கைகள் தான் அரசுக்கு செவிலியர்கள் சங்கம் முன் வைக்கும் கோரிக்கைகளாகும்.
இதனிடையே சட்டசபை நடக்கும் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனை கண்டித்துள்ள எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச் சங்கம், போராட்டத்தை நடத்தி வரும் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் மா.சுப்ரமணியன் உரிய பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது. Medical recruitment board என்பதன் சுருக்கமே எம்.ஆர்.பி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications