ஒரே வாரத்தில் திருநெல்வேலிக்கு வந்த அடுத்த குட்நியூஸ்.. தெற்கு ரயில்வே அதிரடி
மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு: தெற்கு ரயில்வேசேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர ரயில் வருகிற ஏப்ரல் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) வருகிற பிப்ரவரி 4ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல், பிப்ரவரி 5ந் தேதி முதல் திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த ரயிலானது, கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தெற்கு ரயில்வே கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், "16845/16846 ஈரோடு -திருநெல்வேலி தினசரி முன்பதிவு இல்லாத பயணிகள் ரயிலை தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீடிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தள்ளது. ஈரோடு முதல் திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ஜனவரி 24ம் தேதி முதலே செங்கோட்டை வரை இயக்கப்படும் என்று அறிவித்தது. இந்த ஈரோடு -செங்கோட்டை ரயிலை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் எல் முருகன், ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார்.
ஜனவரி 24ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ரயில் ஜனவரி 25ம் தேதி செங்கோட்டைக்கு சென்றது. இந்த ரயில் வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு பிறகு சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடாயம், பவூர்சத்திரம், மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் நின்று இறுதியாக செங்கோட்டைக்கு சென்றது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் பிற்பகல் இரண்டு மணிக்கு புறப்ட்ட இரவு 8.50க்கு திருநெல்வேலி சென்றடைகிறது, அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் அதாவது இரவு 8.55க்கு திருநெல்வேலியில் புறப்படும் ரயில், சேரன்மாதேவிக்கு இரவு 9.12க்கும், 9.22க்கு கள்ளிடைக்குறிச்சியும், இரவு 9.27க்கு அம்பாசமுத்திரமும், இரவு 9.42க்கு கீழக்கடாயமும், 9.56க்கு பவூர் சத்திரமும், இரவு 10.10க்கு தென்காசியும், இரவு 11.10க்கு செங்கோட்டையும் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் ஈரோடு ரயில் தென்காசிக்கு காலை 5.13க்கு வருகிறது. அதன்பிறகு பாவூர்சத்திரம், கீழக்கடாயம், அம்பாசமுத்திரம், கள்ளிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் நின்றுவிட்ட காலை 6.25க்கு திருநெல்வேலி வரும். திருநெல்வேலியில் இருந்து காலை 6.30க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 3 மணிக்கு வழக்கம் போல் ஈரோடு சென்றடைகிறது.












Click it and Unblock the Notifications