அவசரப்பட்டுட்டாங்களே.. டெல்லிக்கு போன ஃபைல்.. அதிமுகவை பாஜக உதறித்தள்ள அந்த "நம்பர்தான்" காரணமாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அதிமுகதான் இந்த கூட்டணியை முறித்து இருந்தாலும் கூட.. கூட்டணி முறிவிற்கு மறைமுக காரணம் என்னவோ பாஜகவின் நடவடிக்கைகள்தான். அதாவது பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரின் பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு காரணம்.

கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவை பாஜக மதிக்காமல் தொடர்ந்து அவமதித்ததற்கு பின் முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும்.. ஒரு நம்பர்தான் பாஜகவின் செயல்பாட்டிற்கு காரணம் என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தினர். அது என்ன நம்பர்?

The number that changed the whole alliance between AIADMK and BJP: What really happened?

அதிமுக - பாஜக கூட்டணியை காக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட அதிமுக தீவிரமாக முயன்றது. அதிமுக இந்த கூட்டணியை காக்க எப்படி எல்லாம் முயன்றது என்பதை பின்வரும் பாயிண்டுகளில் பார்க்கலாம்.

1. அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார். கூட்டணி நீடிக்க வேண்டும் என்றால் அண்ணாமலை தான் சொன்னதை திரும்ப பெற வேண்டும். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக கூறியது., கூட்டணியை காக்க இதுவே ஒரே வழி என்றது. ஆனால் பாஜக இறங்கி வரவில்லை.

2. பாஜக - அதிமுக கூட்டணி நிலைக்க டெல்லி இதில் தலையிட வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்தது. டெல்லி பாஜக இதை கேட்கவில்லை.

3. பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும். அவரை மாற்றினால் கூட்டணி நிலைக்கும் என்று அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால் இதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படி கூட்டணியை காப்பாற்றிக்கொள்ள அதிமுக சில வழிமுறைகளை சொன்னது. அண்ணாமலை தான் சொன்னதை திரும்ப பெறுவது தொடங்கி அண்ணாமலையை நீக்குவது வரை இரண்டு "எல்லைக்கும்" சென்று அதிமுக பாஜகவிற்கு ஆப்ஷன்களை கொடுத்தது.

ஆனால் பாஜக இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவிற்கு கொஞ்சம் கூட இறங்கி செல்வதாக இல்லை. அதுவே தற்போது கூட்டணி முறிய காரணம் ஆகிவிட்டது. கூட்டணியை வேண்டுமானால் முறித்துக்கொள்ளுங்கள் என்று பாஜக விட்டேந்தி மனப்பான்மையில் இருந்ததே கூட்டணி முறிய இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.

அது என்ன நம்பர்?: பாஜகவின் இந்த துணிச்சலுக்கு எல்லாம் ஒரு நம்பர்தான் காரணம் என்கிறார்கள். அது என்ன நம்பர். தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை தொடர்பாக டெல்லிக்கு சில வாரங்களுக்கு முன் ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

அதில் தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை எப்படி என்று விலாவரியாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் .. தமிழ்நாட்டில் தென் மண்டலத்தில், டெல்டா மண்டலத்தில் பாஜக வலிமையாக இல்லை. ஆனால் கொங்கில் இரண்டு இடங்களில், கன்னியாகுமரியில் பாஜகவின் வலிமை கூடி உள்ளது.

கொங்கில் கோவை, ஊட்டியில் பாஜக வலிமையாக உள்ளது. குமரியில் நல்ல வாக்கு வங்கி உள்ளது. இங்கே தனித்து போட்டியிட்டாலும் வெல்ல முடியும் என்று நம்பிக்கையான ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளதாம். அதோடு தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி 10.8 சதவிகிதம் வரை உயரப்போகிறது என்றும் ஒரு நம்பர் டெல்லிக்கு சென்றுள்ளது.

இதுதான் பாஜகவின் துணிச்சலுக்கு காரணம் என்கிறார்கள். அதாவது அதிமுக இல்லாமல் ஒன்று அல்லது 2 எம்பி சீட்டுகளை லோக்சபா தேர்தலில் வென்றால் கூட போதும் சட்டசபை தேர்தலில் 50 + இடங்களை அதிமுகவிடம் பெற முடியும். அதிமுகவுடன் போட்டியிட்டால் 5 சீட்கள்தான் லோக்சபா தேர்தலில் கிடைக்கும். அதுவே தனித்து போட்டியிட்டால் 30 இடங்களில் போட்டியிடலாம். இதனால் மொத்த வாக்கு வங்கியும் உயரும்.

இதன் மூலம் சட்டசபை தேர்தலில் 50 + இடங்களை அதிமுகவிடம் பெற முடியும் என்ற நம்பர் கணக்கு திட்டத்திலும் பாஜக இருக்கிறதாம். இதனால்தான் அதிமுகவிடம் பாஜக இறங்கி போகாமல் விட்டேத்தியாக விட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+