’ஆப்ரேசன் மணி’ அப்பாடா.. நம்ம தப்பிச்சோம்! நிம்மதி பெருமூச்சு விடும் ஓபிஎஸ் & கோ! ஜாலி தான் போலயே?
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மீண்டும் நெருக்கடி அளிக்கும் வரையில் அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டில் சோதனை நடத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியாக இருப்பதோடு இனி எடப்பாடிக்கு வீழ்ச்சி ஆரம்பம் எனக் கூறி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் ஏற்கனவே இரு முறை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று எல் இ டி விளக்கு மாற்றுவதில் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் என தமிழகத்தில் சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி
அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர்(அதிமுக தெற்கு புறநகர் எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர்) இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், காலையில் இருந்தே அதிகளவில் அதிமுகவினர், வேலுமணியில் ஆதரவாளர்கள் அங்கு தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

அதிரடி ரெய்டு
இதேபோல், தமிழக அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கு முன்பு சேலத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதனின் குடியிருப்பில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை குடியிருப்பில் சோதனை செய்த அவர்கள் மருத்துவ கல்லூரி முதல்வரை அழைத்து சென்று அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடும் அதிருப்தி
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில் அதிமுகவை முழுமையாக கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பயணித்த அவரது தரப்புக்கு இந்த ரைடு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் மற்ற அமைச்சர்கள் சற்று கலக்கத்திலேயே இருக்கின்றனர். காரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் இதுவரை சோதனையோ அல்லது நோட்டீஸ் கூட அளிக்கப்படாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்கள் குறி வைத்து சோதனை என்ற பெயரில் சிக்க வைக்கப்படுவதாக கருதுகின்றனர்.

ஓபிஎஸ் & கோ
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரம் போல் செயல்பட்டு வரும் எஸ்பி வேலுமணியின் வீட்டில் தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும், நிலையில் தற்போது அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே என்ன நடந்தாலும் பேசாமல் ஓபிஎஸ் தரப்பிலேயே இருந்து விடலாம் அதுதான் நமக்கும் பாதுகாப்பு என சில முன்னாள் அமைச்சர்கள் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications