மநீம கட்சியின் விருப்ப மனு… நாளை மறுநாள் முதல் பெற்றுக்கொள்ளலாம்
Recommended Video

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுக்களை வரும் 28 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் 28.2.2019 முதல் 7.3.2019 வரை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய தமிழ் நாட்டை உருவாக்க விழைவோர் இவ்விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றத்தை விரும்புவோர் இவ்விருப்ப மனுவில் "தான்" தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம் அல்லது தமக்கே இருப்பதாய் நம்புவோர் இம்மனுவை சமர்ப்பிக்கலாம்.
மக்கள் நீதி மய்யத்தின் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்ப மனுவை பெற விண்ணப்பத் தொகை ரூபாய் 10,000 செலுத்துதல் அவசியம்.
விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை தலைமையகத்தில் 7.3.2019 ற்கு பிறகு கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும்.
சாதனை என்பது சொல் அல்ல செயல்.
நாளை நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்கிக் கொள்ள விரைந்து விண்ணப்பிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications