அண்ணா அறிவாலயத்திற்கு இரவில் வெடிகுண்டு மிரட்டல்.. இந்தியில் வார்னிங்.. மர்ம நபரை பிடித்தது எப்படி?

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நேற்று இரவு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து திமுக அலுவலகத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்தனர். இதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். பாதுகாப்பு கருதி அங்கு இருக்கும் மக்கள் ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர்.

என்ன ஊழியர்கள்

என்ன ஊழியர்கள்

இதனால் அங்கு இருக்கும் ஊழியர்கள் எல்லோரின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. காலையிலும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஊழியர்களின் பைகளும் கடுமையாக சோதனை செய்யப்பட்டது. அங்கு இதனால் அதிக எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டது.

 சைபர் கிரைம் போலீஸ்

சைபர் கிரைம் போலீஸ்

அதே சமயம் இன்னொரு பக்கம் சைபர் கிரைம் போலீசார் இந்த காலை சோதனை செய்து வந்தனர். எங்கிருந்து போன் வந்தது. இதற்கு பின் தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றெல்லாம் சோதனைகள் நடந்தது. இரவு முழுக்க இந்த டிரேசிங் வேலை நடந்தது.

உண்மை இல்லை

உண்மை இல்லை

அதன்பின் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் பொய்யானது. உண்மையில் அப்படி குண்டு எதுவும் வைக்கப்படவில்லை. எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது என்று கடும் சோதனைக்கு பின் உறுதி செய்யப்பட்டது. இதனால் திமுகவினர் நிம்மதி அடைந்தனர்.

யார் அவர்

யார் அவர்

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இந்த காலை செய்த நபரை டிரேஸ் செய்து கண்டுபிடித்தனர். தியாகராயநகரை சேர்ந்த கணேசன் என்பவர்தான இந்த போனை செய்துள்ளார். திமுக மீது இருக்கும் காழ்ப்புணர்வு காரணமாக அவர் இப்படி செய்துள்ளார். கணேசனை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+