பாரத குடியரசுத்தலைவர்.. ஜி.20 மாநாடு விருந்து அழைப்பிதழில் பரபரப்பு.. குவியும் கண்டனங்கள்
சென்னை: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் வழங்கப்பட்ட அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
உலகின் அதிகாரம் மிக்க வல்லரசுகள், அந்த கனவை நோக்கி நடைபோடும் வளரும் நாடுகள் என சக்தி வாய்ந்த 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி-20 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா என பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து உள்ளதால் சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்பாக ஜி-20 கருதப்படுகிறது.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா என பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து உள்ளதால் சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்பாக ஜி-20 கருதப்படுகிறது.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பாரத் மண்டபம்' என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு நடக்கிறது. பருவநிலை மாற்றம் சர்வதேச பொருளாதாரம், பருநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுத்து வரும் ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
மேலும் உக்ரைன் போரின் எதிரொலியாக நிகழ்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதைத்தவிர வறுமை மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வதற்காக உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது. ஜோ பைடன் பங்கேற்பு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தர உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.
சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த ஏராளமான தலைவர்கள் முதல் முறையாக ஒரே நேரத்தில் இந்தியாவில் திரளுவதால் அகில உலகின் கவனமும் டெல்லியை நோக்கி திரும்பி இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்தியாவும் இந்த தலைவர்களை வரவேற்கவும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தவும் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் இந்த வேளையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு வருகிறது.
டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லி அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளன. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்கள் நிகழ்நேர போக்குவரத்து நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருகை தர உள்ள விருந்தினர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்கப்பட உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் தற்போது பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ள நிலையில் நாட்டினை பெயரையே பாரத் என மாற்ற முயற்சி செய்யப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications