விலையோ குறைவு.. தரமோ அதிகம்.. இனி ஆபீஸ் வேண்டாம்? Co-Working Space இருக்கு!
சென்னை: உலகம் முழுக்க ஒர்க் ஃபிரம் ஹோம் கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில் , தமிழக அரசு அதை மனதில் கொண்டு தரமான பகிர்வு பணியிட மையத்தைக் குறைந்த கட்டணத்தில் திறந்துள்ளது.
பல விசயங்களில் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே ரோல் மாடல். இந்திய அளவில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் தமிழ்நாடு 2வது மாநிலமாக இருக்கிறது. தொழில் துறை, மின்சார வாகன உற்பத்தி என பல துறைகளில் நம் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. வேலை செய்யும் பெண்களுக்கு அரசு சார்பில் தோழி விடுதி, கல்லூரி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை என பல முன்மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகிறது.

அந்த வரிசையில் ஒரு புதிய கான்செஃப்ட்டை கண்டுபிடித்து அதைச் செயல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. அப்படி என்ன முன்னோடியான திட்டம் என்கிறீர்களா? கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உலகம் முழுக்க ஒர்க் ஃபிரம் ஹோம் என்ற புதிய கலாச்சாரம் உருவெடுத்துள்ளது. பலரும் அலுவலகம் போகாமலே நேரத்தை, அலைச்சலை மிச்சப்படுத்தி வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

பெங்களூருவில் அலுவலகம் இருக்கும் ஒரு ஐடி நிறுவனத்திற்கு அம்பாசமுத்திரத்திலிருந்தே வேலை பார்க்கலாம் என்ற நிலையைக் கொண்டு வந்துள்ளது இணைய உலகம். நீங்கள் எங்கே இருந்தாலும் ஒரு நிறுவனத்துடன் இணையலாம். பணியாற்றலாம். அதுவும் ஏமாற்றாமல் தரமான பங்களிப்பை வழங்கக் கூடியதாக இந்த ஒர்க் ஃபிரம் ஹோம் கல்ச்சர் மாறி இருக்கிறது.
ஆனால், எவ்வளவு காலம்தான் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு வேலை பார்க்க முடியும். அலுவலகம் என்றால் நான்கு மனித முகங்களைப் பார்க்கலாம். லேசாக டீ குடித்தபடி கொஞ்சம் அரட்டையும் வேலை பார்க்கலாம். அந்த வாய்ப்பு வீட்டில் கிடைக்காது. மேலும் பல நேரங்களில் ஒர்க் ஃபிரம் ஹோம் என்பதை வீட்டில் இருப்பவர்கள் ஏதோ வேலை இல்லாமல் உட்கார்ந்திருப்பதாக நினைத்து மார்கெட் வரை போய் வரலாமே என்று மல்லுக்கட்டத் தொடங்கி விடுகின்றனர்.
அதை எல்லாம் மனதில் வைத்து தரமான ஏற்பாட்டைச் செயல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. அதுதான் கோ ஒர்கிங் ஸ்பேஸ். அதாவது பகிர்வு பணியிட மையம். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை வளர்ச்சிக் குழுமமும் இணைந்து சென்னை கொளத்தூரில் இந்த மையத்தைத் திறந்துள்ளது. இங்கே நீங்கள் உங்கள் சொந்த அலுவலகத்தின் வேலைகளை உட்கார்ந்து மிக அமைதியாகச் செய்யலாம். ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள இந்த மையத்திற்கு 'முதல்வர் படைப்பகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தின் தரை தளத்தில் பகிர்வு பணியிட மையம் செயல்படுகிறது. ஒரு அலுவலகத்தில் உள்ளதைப்போலவே நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடவே 4 மற்றும் 6 பேர் அமர்ந்து கலந்தாலோசிக்கக் கூடிய அளவு மீட்டிங் ஹால் இரண்டும் உள்ளன. இங்கே வை ஃபைவ் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் தனியார் Co-Working Space இல் கட்டணம் என்பது அரசுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகம் இருக்கும் என்கிறார் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பிரதிநிதி. இதே கட்டடத்தின் முதல் தளத்தில் கல்வி மையம் ஒன்று செயல்படுகிறது. அதில் மாணவர்கள் தங்கள் அரசுத் தேர்வுக்காக தங்கி, இடையூறுகள் இல்லாமல் மிகச் சுதந்தரமாகப் படிக்கலாம். இங்கே ஒரே நேரத்தில் 50 நபர்கள் வரை தங்கிப் படிக்கலாம். அதே மாதிரி 40 பேர் அமர்ந்து பணி செய்யலாம்.
இங்கே அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகள், ஷோபா செட்டுகள், மர ஃபர்னிசர்கள் என அனைத்தும் கார்பரேட் தரத்தில் மிக ஆடம்பரமாக உள்ளன. வசதிகள் அதிகம், செலவும் குறைவு என்பதால் இந்தப் பகுதி மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர். இதைப் பயன்படுத்த விரும்புகின்றவர்கள் சென்னை மாநகராட்சி இணையத் தளத்தில் முன்பதிவு செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த மையம் செயல்படும். இதற்கு ஒரு நாள் கட்டணமாக 100ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. மாதக் கட்டணமாக 2,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இங்கே படிக்கவும் வேலை செய்யவும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதே போன்று சென்னையில் பல பகுதிகளிலும் உருவாக்கித் தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications