ஆவின் பால்.. வணிகரீதியாக வாங்குவோருக்கே விலை உயர்கிறது! சாமானியர்களுக்கு அதே ரேட்- அமைச்சர் விளக்கம்
சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். ஏழை, நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு பாதிக்காது என்றும் பால் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இல்லை என்றும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறம் பால் பாக்கெட் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறம் பால் பாக்கெட் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும்.

அட்டைதாரர்களுக்கு மாற்றமில்லை
தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

தனியார் பால் விலை எவ்வளவு
இந்த விலை மாற்றம் உற்ப்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகிழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 24 குறைவு. சில்லறை விலையில் விற்க்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 10 குறைவு. உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும் சில்லறை விற்பனையாளர்களும் மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் நாசர் விளக்கம்
பால் விலை உயர்வுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்த்தப்பட்டது ஏன் என்று அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பசும்பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி 35 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்.

பால் விலை உயர்வு ஏன்?
இந்த விலையேற்றத்தால் விற்பனை விலையில் சாமானிய மக்களை சென்றடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். வணிக ரீதியாக வாங்கும் நபர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தி 48க்கு பதிலாக 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என்று கூறினார். இந்த பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்
அதிமுக ஆட்சி காலத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் வரை குறைத்து நடவடிக்கை எடுத்தார். தற்போது தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications