தக்காளி ரூ.100, வெண்டை ரூ.90, கத்தரி ரூ.60! மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
சென்னை: கடந்த ஒருவாரமாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் சென்னை கோயம்பேடு உட்பட தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது.
இந்த விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்..

வரத்து குறைவு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காய்கறி விளைச்சலும் பாதிப்பை சந்தித்துள்ளது. விளை நிலங்களில் மழை வெள்ளநீர் புகுந்ததால் காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறையத் தொடங்கிவிட்டது.

தக்காளி விலை
இதன் காரணமாக தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.30 என விற்கப்பட்டு வந்த தக்காளி தங்க விலையை போல் உயர்ந்துகொண்டே வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் கிலோ ஒன்று ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வெண்டைக்காய் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது.

5 டன் காய்கறி
5 டன் காய்கறிகள் வர வேண்டிய இடத்திற்கு இப்போது 3 டன் காய்கறிகள் மட்டுமே வருவதாகவும் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனவும் சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரி முத்துக்குமரன் தெரிவிக்கிறார். எல்லா காய்கறிகளுமே கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மழை குறையத் தொடங்கிய பிறகு காய்கறி வரத்து அதிகரிக்கக்கூடும் என்றும் அதன் பிறகு காய்கறிகளின் விலை குறையக்கூடும் எனவும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மக்கள் கலக்கம்
தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிகாய், முருங்கைக்காய், வெங்காயம் என சமையலுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகளின் விலை விறுவிறுவென உயர்ந்துகொண்டே வருகிறது. ஏற்கனவே மழை வெள்ளப் பாதிப்புகளால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ள ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, இந்த விலை உயர்வு மேலும் கவலையை கொடுத்திருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications