Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதலமைச்சர் உதயநிதி..சனாதனத்திற்கு எதிராகப் போர்..கருவறையில் சமூக நீதி! அர்ச்சகர்கள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சனாதனத்திற்கு எதிராக போர் செய்வோம்.. சமத்துவ சமூக நீதியை கருவறையில் நிலை நாட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார்.

udhayanidhi stalin deputy chief minister tamil nadu cabinet shuffle

இதனையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், திமுகவினர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சனாதன எதிர்ப்பு போராளி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். துணை முதல்வராக பதவியேற்றதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அச்சகர்கள் சங்கம் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் கூறிக் கொள்கிறது. சனாதனம் என்றால் நிரந்தரமாக மாறாதது நிலையானது என்று பொருள்.

மாறாமல் நிரந்தரமாய் உள்ள சாதி வர்ணாசிரம கட்டமைப்பை, மாற்றி எல்லோரையும் சமத்துவம் நிறைந்த மனிதர்களாக மாற்றுவதற்காக. கொள்கை உறுதியோடு பேசி பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

udhayanidhi stalin deputy chief minister tamil nadu cabinet shuffle

பெரியார் - அம்பேத்கர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக நியமனம் செய்திருப்பது, தமிழக அரசியலில் இளைஞர்களின் அத்தியாயம் தொடங்கியதை குறிக்கிறது.

கோயிலில் உள்ள அதிகாரத்தை வைத்து தான் தமிழ் சமூகத்தில், சாதிய வர்ணாசிரம கட்டமைப்பு நிலை நிறுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் ஆலயங்களில், தங்களைத் தவிர யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நிலையான சனாதன அதிகாரத்தை கொண்டுள்ளார்கள் குறிப்பிட்ட சில ஆயிரம் பேர். இறைவனின் ஆலயங்களில், சமத்துவத்தை நிலை நாட்டுவதே சமூகநீதி.

அந்த வகையில் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இறைவன் விரும்பிய படி கோயிலில் சமத்துவத்தை நிலை நாட்ட, அனைத்து சாதி இந்துக்களையும் அர்ச்சகராக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோருகிறோம்.

அனைத்து திட்டங்களுக்கும், செயலாக்கம் தரத் தக்கவர் என்ற வகையில், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தையும் துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் பெரிய கோயில்களில் நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம். அவரின் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.. இறைவனை வேண்டுகிறோம் நன்றி." என கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+