Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ஒரு பேட்டி.. கட்சி பொறுப்பில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட என்ன காரணம்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டிதான் திமுகவில் அவர் பதவி பறிபோக காரணம் என்று தகவல்கள் வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டி.கே.எஸ் இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி!

    சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டிதான் திமுகவில் அவர் பதவி பறிபோக காரணம் என்று தகவல்கள் வருகிறது.

    திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார் டிகேஎஸ் இளங்கோவன்.

    கட்சியின் மிக முக்கியமான மூத்த உறுப்பினர்களில் இவர் முக்கியமானவர். இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அப்பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    [ டி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியில் இருந்து விடுவிப்பு- திமுக அதிரடி அறிவிப்பு ]

    என்ன காரணம்

    என்ன காரணம்

    டிகேஎஸ் இளங்கோவன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு காரணம் கசிந்து வருகிறது. அவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதுதான் சர்ச்சைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதில் டிகேஎஸ் இளங்கோவன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

    பழக்கம்

    பழக்கம்

    அதிமுகவினரை திமுக கூட்டத்திற்கு அழைக்கும் வழக்கம் இல்லை. அவர்கள் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை . அதேபோல் நாங்களும் அழைக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எங்கள் தோழமை கட்சிகள் எப்போதும் போல் வருவார்கள் என்று கூறினார்.

    நீக்கம் செய்யப்பட்டார்

    நீக்கம் செய்யப்பட்டார்

    இதுதான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. திமுக யாரை அழைக்க வேண்டும் என்று இன்னும் முடிவு எடுக்கவே இல்லை என்று தகவல் வருகிறது. ஆனால் அதற்கு முன் டிகேஎஸ் இளங்கோவன் இப்படி பேசியது கட்சி விதிக்கு எதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே சில பிரச்சனைகளின் போது டிகேஎஸ் இளங்கோவன் இப்படி பேசி உள்ளதாக தகவல்கள் சென்றுள்ளது. இதன் காரணமாகவே திமுக தலைமை இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாம். நாடாளுமன்ற தேர்தல் வரை செய்தி தொடர்பாளர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் திமுக தலைமை கழகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+