ஸ்டாலின் மிரட்டுகிறார்.. மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு வேற.. எடப்பாடி பழனிசாமி பகீர்
எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்து குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக சொன்னால், அதுக்கு ஸ்டாலின் மிரட்டுகிறார்.. மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்கிறார்" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரை விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது.. இதையடுத்து தமிழக அரசு முழு வீச்சில் களமிறங்கியது.. முதல்வர் நேரடியாகவே தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்..
அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

விசாரணை கமிஷன்
ஆனால் செல்லுமிடமெல்லாம் வழக்கம்போல் முதல்வர் ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.. அதிலும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பேட்டிகளில் சொல்லும்போது, "சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தும் கூட ஸ்டாலினுக்கு எப்படி இதுபோன்ற மழை நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை.. எங்கள் மீது பழி சுமத்த காரணம் எதுவும் கிடைக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் என்கிறார்... திறமையான அரசாங்கம் இன்று இல்லை.. அதை மறைக்கத்தான் அதிமுக அரசை அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.. ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த விஷயத்தில் செயல்படவில்லை... இதுவே இந்த வெள்ளத்திற்கு காரணம்" என்றார்.

விமர்சனம்
இப்போது மறுபடியும் திமுக அரசு மீது காட்டமான விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.. கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்... நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட போகிறோம்.

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு, மத்திய அரசிடம் கேட்டால் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.. 100 ஏரி நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்த நிலையில், திமுக அரசு அதனை மெத்தனமாக செய்து வருகிறது... அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதால்தான் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது. வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திராணி இல்லாத ஸ்டாலின் மிரட்டுகிறார். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார்.

அறிவிப்பு
அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்... அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது... திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி. இந்த குற்றச்சாட்டுகளுக்கும், புகார்களுக்கும் திமுக தரப்பு ஏதாவது பதில் தர போகிறதா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications