எங்க கேப்டனை ஒரு முறை பாத்துக்குறேன் சாமி.. தடுத்ததால்.. கண்ணீர் மல்க கெஞ்சிய தேமுதிக பெண் தொண்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் வீட்டில் ஏராளமான கூட்டம் கூடியதால் அஞ்சலி செலுத்த வந்த பெண்ணை போலீசார் தடுத்தநிலையில், அய்யா ஒரே ஒரு முறை எங்க கேப்டனை பாத்துக்குறேன் சாமி....' உள்ளே விடுமாறு கண்ணீர் மல்க கெஞ்சிய தேமுதிக பெண் தொண்டரின் வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி கண்போரை கலங்க வைத்துள்ளது.

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சை பெற்றபடி வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது.

The request of the female volunteer of DMDK who came to pay homage to Vijayakanth

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .

கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (டிச.28) காலை விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். மருத்துவமனையில் விஜயகாந்த் மரணம் உறுதி செய்யப்பட்டு.. போஸ்ட்மார்ட்டம் உடனடியாக செய்யப்பட்டு.. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

அங்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் ஆம்புலன்சில் உடல் ஏற்றப்பட்டது. பின்னர் போலீஸ் வாகனம் பின்னால் அணிவகுக்க ஆம்புலன்ஸ் பாதுகாப்போடு சென்றது. விஜயகாந்த் உடல் வந்த ஆம்புலன்ஸை சுற்றிக்கொள்ள தொண்டர்கள் முயன்றாலும் போலீசார் தடுத்து ஆம்புலன்ஸை வீட்டு வாசல் உள்ளே வரை செல்லும் வகையில் கொண்டு சென்றார்கள். இதன் மூலம் நேரடியாக வீட்டின் முன் பக்கம் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் மறைவால் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். பலரும் கதறி அழுதபடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் கூட்டம் அலைமோதி உள்ளது.

ஒருமுறையாவது அவரது உடலை பார்க்க வேண்டும் என்றும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கண்ணீர் விட்டபடி தொண்டர்களும், காத்துக்கிடக்கிறார்கள். தொண்டர்களுடன், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தற்போது அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஏராளமான கூட்டம் கூடியதால் அஞ்சலி செலுத்த வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் அய்யா ஒரே ஒரு முறை எங்க கேப்டனை பாத்துக்குறேன் சாமி.. என்னை தயவு செய்து உள்ளே விடுங்க என்று போலீசாரிடம் கெஞ்சினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்துள்ள பலர் அஞ்சலி செலுத்த வந்து கொண்டே இருக்கும் நிலையில், நாளை மாலை தான் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவர் அய்யா ஒரே ஒரு முறை எங்க கேப்டனை பாத்துக்குறேன் சாமி.. என்னை தயவு செய்து உள்ளே விடுங்க என்று போலீசாரிடம் கெஞ்சினார். இந்த வீடியோ சமூக ஊடஙகளில் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்துள்ள பலர் அஞ்சலி செலுத்த வந்து கொண்டே இருக்கும் நிலையில், நாளை மாலை தான் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+