அதிர்ச்சி அளித்த ரஜினி பேட்டி.. குழப்பத்தில் ரசிகர்கள்.. அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா பாஸ்!
நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த முன்னுக்குப்பின்னான அறிவிப்புகள் எல்லாமும் அவரது ரசிகர்களை பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த முன்னுக்குப்பின்னான அறிவிப்புகள் எல்லாமும் அவரது ரசிகர்களை பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் இறுதி நாள், அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கட்சியை தொடங்கி தமிழக சட்டமன்ற தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறினார்.
ஆனால் அதற்கு பின் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து நிறைய குழப்பமான அறிவிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு வருகிறார்.

டிசம்பரில் அறிவிப்பு
சென்ற டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்ட ரஜினி ஒருவருடம் கழித்து இந்த டிசம்பரில்தான் கட்சி குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். டிசம்பர் 12ம் தேதி வரப்போகும் ரஜினியின் பிறந்த நாள் அன்று இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் கட்சியின் பெயர் கொடியை அவர் வெளியிட வாய்ப்புள்ளது.

நடக்காது என்கிறார்கள்
ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், ரஜினி அப்படி அறிவிப்பு வெளியிடும் திட்டம் எதிலும் இல்லை என்று கூறியுள்ளனர். அதன் காரணமாகத்தான் மற்றவர்கள் போல அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி பேசியதாக தெரிவிக்கிறார்கள். இந்த வருடம் பெரிய அறிவிப்பு எதுவும் ரஜினியிடம் இருந்து இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

பாவம்
அதுமட்டுமில்லாமல்., ரசிகர் மன்றத்தில் பல வருடமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பதவி கொடுக்க முடியாது. கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரஜினி குண்டை தூக்கி போட்டுள்ளார். இதற்கு ஏற்றபடி ஏற்கனவே சில முக்கிய உறுப்பினர்களை அவர் மன்றத்தில் இருந்து நீக்கியுள்ளார். அந்த இடத்திற்க்கு புதிய நபர்களை கொண்டு வந்துள்ளார்.

பெரிய அதிர்ச்சி
இது சில முக்கிய உறுப்பினர்களுக்கு மன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 40 வருடமாக உழைத்தவர்களுக்கு பதவி கிடையாது என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ரஜினியின் கட்சியே அவரது உண்மையான அடிமட்ட ரசிகர்களை நம்பித்தான் இருக்கிறது. கடைசியில் அவர்களே அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் வெளியாகும் அறிவிப்பு எல்லாம் பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.

ரஜினி வருவாரா மாட்டாரா?
இது எல்லாம் சேர்த்துதான் ரஜினி அரசியலுக்கு உண்மையில் வருவாரா இல்லையா என்று கேள்வியை எழுப்பி இருக்கிறது. அரசியல் அறிவிப்பு இல்லாத போது வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுத்தவர், இப்போதெல்லாம் மூன்று படங்களை ஒரேயடியாக நடித்து கொடுத்து வருகிறார். இப்படி தொடர்ந்து மாற்றி மாற்றி முடிவு எடுப்பதுதான் இவரின் அரசியல் வருகையை கேள்வி கேட்க வைக்கிறது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications