வேலையை தொடங்கிய ஆதித்யா எல்1.. பேராபத்துகளை இனி ஈஸியாக கணிக்கலாம்! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவிகள் தனது அளவீடுகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் ஒளியானது பூமியை வந்தடைய 7-8 நிமிடங்கள் வரை ஆகும். இந்த சூரிய ஒளியானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. இது தவிர, சூரியனிலிருந்து அவ்வப்போது காந்த புயல்களும் வெளி வருகிறது. இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகள், சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்களை ஆய்வு செய்யவும் 'ஆதித்யா L1' அனுப்பப்பட்டிருக்கிறது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இதுதான் என்பதால் இதன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவில் பூமியின் ஈர்ப்பு விசை சில லட்சம் கி.மீ வரை இருக்கும். இதனை 5 புள்ளிகளாக பிரித்து அதற்கு 'லெக்ராஞ்சியன் பாயிண்ட்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த புள்ளியில்தான் ஆதித்யா எல்1 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விண்கலம் கடந்த மாதம் 2ம் தேதி முதல் தனது செயல்பாடுகளை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவில் தனது அளவீடுகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது. அதாவது சூரியனிலிருந்து வரும் சூரிய காற்று அயனிகள், புரோட்டான்கள், ஆல்பா துகள்களை அளவிட தொடங்கியுள்ளது. இதில் சூரிய காற்று அயனிகள் பூமியல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆதித்யா எல்1 ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications