அரசு ஊழியர்களின் தன்னலம் கருதாத சேவை.. உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலு.. நன்றி சொன்ன முதல்வர்
சென்னை: அரசு இயந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமெனில் அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இளநிலை உதவியாளர்கள் 5,278, தட்டச்சர்கள் 3,339, சுருக்கெழுத்தாளர்கள் 1,077, கிராம நிர்வாக அலுவலர்கள் 425, வரி தண்டலர்கள் 67, களஉதவியாளர்கள் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு காலத்திலும் குறையாது என்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு தீட்டும் எந்த திட்டமும் மக்கள் நன்மைக்காகத்தான். அரசு ஊழியர்களில் பலர் தன்னலம் பாராமல் பணி செய்துவருகின்றனர். உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
நீங்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக ஆகி விட்டீர்கள். கடந்த வாரம் நான் அறிவிப்பு வெளியிட்டேன். இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் என்று கூறினேன். தேனி மாவட்டம் சின்னமனூரில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வடிவேல் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இது உடல் உறுப்பு தானம் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்கள் சேவையை கருத்தில் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்ற வேண்டும். ஒரு கருவியோ,இயந்திரமோ சிறப்பாக செயல்பட அதில் உள்ள ஒவ்வொரு கருவியும் சிறப்பாக செயல்பட வேண்டும். அது போலத்தான் அரசு என்கிற இந்த மாபெரும் இயந்திரம் சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் நீங்கள் முழு ஈடுபாட்டோடு பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் முதல்வர்.

அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மத்திய அரசு பணி தேர்வில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நம்முடைய கோரிக்கைகளை ஏற்று ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வை தமிழில் எழுதலாம் என அறிவித்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications