உதயநிதி விஜய் முன்னாடி சொன்ன அந்த சூப்பர் தகவல் பார்த்தீங்களா? திமுகவால் சட்டசபையே அதிர்ந்த பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், அதற்கு பின்னால் நடந்த அரசியல் குதிரை பேரங்கள் மற்றும் சலசலப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.. சென்னை தலைமை செயலகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று இப்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மணி சொன்ன கருத்து என்ன?

சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விதம் குறித்து பேசிய பத்திரிகையாளர் மணி அரசியல் களம் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.

Udhayanidhi Vijay Assembly Speech

அதில், "விஜய் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விட்டார்.. ஆனால் அதிமுகவை உடைத்துவிட்டார்.. 5 வருஷத்துக்கு மேல அதிகாரம் இல்லாம இருக்க முடியாத சிவி சண்முகம், வேலுமணி தரப்பினர் இப்போ பதவிக்காகவும் பணத்துக்காகவும் விஜய் பக்கம் சென்றுள்ளனர்..

விஜய் செய்த பிழை

ஓட்டு கேட்டு வெற்றி பெற்ற பிறகு பதவிக்காக கட்சி மாறியவர்களை துரோகிகள் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது ஒதுக்கி தள்ள முடியாத சரியான கருத்து தான்.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை வீடு தேடி போய் பார்த்த விஜய், 47 எம்எல்ஏக்களை வச்சிருக்க மூத்த தலைவரான எடப்பாடி பழனிசாமியை பார்க்காம தவிர்த்துள்ளார்.. எடப்பாடியை சென்று சந்தித்திருந்தால், விஜயின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும்.. இது அவருடைய அணுகுமுறையில் இருக்கிற மிகப்பெரிய பிழை என்றே கருதுகிறேன்..

உடைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் வாக்கு வங்கி இப்போ சின்னாபின்னமாகிட்டு இருக்கு.. இந்த கேலி கூத்தையெல்லாம் தமிழ்நாடு இப்போ பார்த்துட்டுதான் இருக்கு

கடந்த 54 ஆண்டுகளில் அதிமுக தொடர்ந்து 5 ஆண்டுகள் கூட அதிகாரம் இல்லாமல் இருந்ததே கிடையாது.. ஆனால் இப்போது தொடர்ந்து 2-வது முறையாக அதிகாரம் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு புதுவிதமான சூழ்நிலையாக இருக்கிறது.. அதிகாரம் மற்றும் பதவி இல்லாத இந்த மோசமான நிலைமையைத் தாங்க முடியாமல் தான், அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தங்களுக்குப் பதவியும், அதிகாரமும் வேண்டும் என்பதற்காக விஜய் நோக்கி நகர்ந்து வந்துள்ளார்கள்..

உதயநிதி சொன்ன தவறான கருத்து

அதேபோல சட்டமன்ற விவாதத்தில் விஜயை விட உதயநிதி ஸ்டாலின் தான் நன்றாகப் பேசினார்.. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால், உதயநிதி பேசிய சில கருத்துக்கள் தவறானவை.. உதாரணமாக "நீங்க 34% ஓட்டு தான் வாங்குனீங்க, திமுக + அதிமுக சேர்ந்து 64% ஓட்டு வாங்கியிருக்கோம்" என்று உதயநிதி பேசுகிறார்..

தமிழ்நாட்டு அரசியலில் கலைஞர், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்திலும் இதேதான் நடந்தது.. இவர்களுக்கு மக்கள் தூக்கி 70% அல்லது 80% ஓட்டுகளைக் கொடுத்துவிடவில்லை.. நம்முடைய தேர்தல் முறைப்படி யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் தான் அதிகமாக இருக்கும்.. மத்தியில் மோடி கூட 37% ஓட்டுகள் பெற்றுத்தான் ஆட்சி செய்கிறார், மீதி 63% ஓட்டுகள் அவருக்கு எதிராகத்தான் விழுந்தன.. இதை ஒரு பெரிய பாயிண்ட்டாகச் சொல்லி திமுகவினர் தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்..

சிறந்த ஸ்பீச் உதயநிதியுடையது

அதேசமயம், உதயநிதி பேசிய சில விஷயங்களை நான் மறுக்கவில்லை.. "தூய்மையான அரசியல் பண்ணுவேன்னு சொல்லிட்டு நீங்க கட்சிகளை உடைக்கிறீங்க" என்று விஜயைச் சாடியது மற்றும் 'புஷ்பா' படத்தை உதாரணமாகக் காட்டி குதிரை பேரம் பற்றி அவர் பேசிய அரசியல் பாயிண்ட்டுகள் மிகவும் கூர்மையாக இருந்தன, அதை நான் ரசித்தேன்.. உதயநிதிக்கு பின்னால் 75 ஆண்டுகால கட்சி பின்புலமும், சிறந்த ஸ்பீச் ரைட்டர்ஸ்களும் இருந்தாலும், அவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது.. அதை உள்வாங்கித்தான் அவர் பேசுகிறார்..

முதலமைச்சர் விஜய் விவாதத்தில், உதயநிதிக்கு ஈக்குவலாகப் பேசவில்லை.. பொதுவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் மெஜாரிட்டி இல்லாத முதலமைச்சர்கள் சட்டமன்றத்தில் மிகவும் விரிவாகவும், ஆழமாகவும் பேசுவார்கள்.. ஆனால் அந்தப் பக்குவமோ, ஆழமோ விஜயிடம் இல்லை.. அனுபவமின்மை அதற்கு ஒரு முக்கிய காரணம்..

உதயநிதி ஸ்டாலின் வைத்த சூப்பர் பாயிண்ட்

உதயநிதி தனது பேச்சில் ஒரு மிகச்சிறந்த பாயிண்ட்டை முன்வைத்தார்.. தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது, ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜாகவின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கூட அது பாடப்படவில்லை என்று உதயநிதி சொன்னது மிகச்சிறந்த பாயிண்ட்.. உதயநிதி சொல்லிதான் இந்த விஷயமே எனக்குத் தெரியவந்தது.. இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் உதயநிதி தான் முழுமையாக ஸ்கோர் செய்துள்ளார், விஜய் பின்தங்கியிருக்கிறார்.. வரும் நாட்களில் விஜய் தன்னை ஷேப் பண்ணிப்பார் என்று நம்பலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+