நல்லா பார்த்துக்கோங்க.. இதுதான் முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம்! ஆபீஸ்களில் வைப்பார்கள்
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் இனி 'தளபதி' தரிசனம்! தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, கோட்டையில் தடம் பதித்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் தற்போது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை (பி.ஆர்.4) சார்பில் அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசுச் செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., கையெழுத்திட்டுள்ள அந்த அரசாணையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம், அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த ஏதுவாக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், முதலமைச்சர் விஜய், வெள்ளை நிறச் சட்டை மற்றும் கறுப்பு நிற கோட் அணிந்து, புன்னகையுடன் கூடிய பக்கத்து வீட்டு பையன்போன்ற ஈஸியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் புகைப்படம், மிகவும் நேர்த்தியாகவும் அதிகாரப்பூர்வத் தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வரவேற்பு அறையிலும், முதலமைச்சரின் அறை மற்றும் முக்கியமான பொது இடங்களிலும் இனி இந்தப் புகைப்படம் இடம்பெறும். தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது தலைவனை முதலமைச்சர் நாற்காலியில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த வேளையில், அரசின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர்களுக்கு இரட்டிப்பு இனிப்பை வழங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாகத் தனது பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய், தற்போது அரசு ஆவணங்கள் மற்றும் அலுவலகங்களிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கிவிட்டார் என்பதையே இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications