Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டன் இட்லிக்கு “வைப்” ஆன தமிழர்கள்.. தீபாவளி முடிஞ்சும் ருசி போகல! சோசியல் மீடியால பேச்சும் அடங்கல

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட நிலையில், இன்னும் மட்டன் இட்லி பற்றிய பேச்சே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது.

நேற்று தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உள்ள மக்கள் பட்டாசுகளை வெடித்து, பலகாரங்கள் சுவைத்து கோலாகலமாக கொண்டாடினார்கள். வெளியூர், வெளிமாநிலங்களில் கல்வி, வேலைக்காக தங்கி இருந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தீபாவளி என்றால், அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பூஜை செய்து, வீட்டில் சமைத்த உணவு, இனிப்பு பலகாரங்களை சுவைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

The talk of Mutton Idli is still taking over the social media due to Diwali

ஆனால், தற்போது இந்த வழக்கம் மாறி தீபாவளி என்றாலே மட்டனை சமைத்து இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதை முதல் வேலையாக மாற்றி இருக்கிறார்கள் தமிழர்கள். இட்லி, சாம்பார், முருக்கு, அதிரசம், உருண்டையுடன் சேர்த்து ஆட்டு இறைச்சியும் முக்கிய அங்கமாக தீபாவளியில் சேர்ந்து இருக்கிறது. சட்னி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட வேண்டிய இட்லியை தீபாவளி அன்று மட்டனுடன் சேர்த்து சாப்பிட்டு வைபாக்கி வருகிறார்கள் மக்கள்.

ரம்ஜான், பக்ரீத் என்றால் பிரியாணி, பொங்கல் என்றால் சர்க்கரை பொங்கல் என்று சொல்கிறோமோ அதேபோ, தீபாவளி என்றால் மட்டன் இட்லி என்ற நிலைக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். தீபாவளி அன்று காலை தூங்கி எழுந்தவுடனே ஆட்டுக்கறி வாங்குவதற்காக மக்கள் கறிக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், மட்டன் இட்லி புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாஷா அல்லா என்ற பெயர் கொண்ட கடை முன்பாக ஏராளமான மக்கள் தீபாவளிக்கு கறி வாங்க நிற்பது. ஹலால் ஃப்ரீ தீபாவளி கொண்டாடுவோம் என ஹலாலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பதிவிட்ட நிலையில் இந்த புகைப்படத்தை பலர் பகிர்ந்து இதுதான் தமிழ்நாடு என்று கருத்திட்டு வருகிறார்கள்.

அதேபோல் மட்டன் இட்லி, குடல் கறி இட்லி, மட்டன் கறி சோறு சாப்பிடும் புகைப்படங்களையும் ட்விட்டர் பேஸ்புக்கில் பலர் பதிவிட்டு உள்ளார்கள். பார்த்தாலே நாக்கு ஊற வைக்கும் அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்போம்.

ஜி சுந்தர்ராஜன் என்பவர் எக்ஸ் தளத்தில், “நெய்ச்சோறு, மட்டன் சுக்கா, கோழிச் சுக்கா, கறிக் குழம்பு அவ்வளவுதான், தங்கச்சி வீட்டில். கறிக்கடையில் கூட்டம் அதிகம், கொத்துக்கறி கிடைக்கவில்லை என்பதால் கோலா உருண்டை இல்லை என்கிற வருத்தம்தான். ஆட்டுக்கறி திருநாள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

குமரன் கருப்பையா என்பவரும் பேஸ்புக்கில், “தீபாவளிக்கு மட்டன் குழம்பு வச்சு படையல் போடுற ஒரே மாநிலம் தமிழ்நாடு.” என்று குறிப்பிட்டு தோசை - மட்டன் கறி புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநில செயலாளர் திவ்யா மருந்தையா, “தீபாவளி நல்வாத்துக்கள். குறைவான சத்தத்துடன் பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு சந்தித்து வாழ்த்துங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டு இட்லி மட்டன் படத்தை வெளியிட்டு உள்ளார்


சோபி என்பவரும் தீபாவளி வாழ்த்துடன் இட்லி மட்டன் படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

பழனிக்கண்ணு என்பவரும் எக்ஸ் தளத்தில் கட்டாய தீபாவளி காலை உணவு என்று குறிப்பிட்டு இட்லி மட்டன் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

பேஸ்புக்கில் வாசு சுமதி என்பவர், “ஆடி பாடி, உண்டு களித்து, இன்று போல் என்றும் மகிழ்ந்திருப்போம் உறவுகளே! வாழ்தல் இனிது ❤️” என்று குறிப்பிட்டு இட்லி, தோசை, மட்டன் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மற்றொருவர் ஹேப்பி குடல் குழம்பு டே என்று குறிப்பிட்டு அதை சமைக்கும் வீடியோவையே ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+