இனிமே மின்சார கட்டணம் தாறுமாறாக உயராது! தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்! வந்தது புதிய இபி ரீடிங் முறை
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் EB மின் கட்டண ரீடிங் முறையில் புதிய சரிபார்ப்பு முறையை கொண்டு வர உள்ளது. வீடுகளுக்குத் திடீரென ஏற்படும் மிக அதிக மின் கட்டணங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், புதிய கட்டணச் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இப்புதிய முறை, நுகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க உதவும்.
தற்போதைய நடைமுறையில், மீட்டரில் இருந்து எடுக்கப்படும் மின் நுகர்வுத் தரவுகள் கணக்கீட்டு மென்பொருளில் உள்ளீடு செய்யப்பட்டவுடன், கட்டணத் தொகை நுகர்வோரின் கணக்கில் உடனடியாகப் பதிவேற்றப்படுகிறது. கட்டணம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவோ அல்லது பதிவு தவறாகவோ இருந்தால் கூட, நுகர்வோர் முதலில் தொகையைச் செலுத்திவிட்டு, பின்னர் புகார் அளிக்க வேண்டும்.

மின்சார கட்டண முறையில் மாற்றம்
மீட்டர் ஆய்வு மூலம் தவறு உறுதி செய்யப்பட்ட பின்னரே, அடுத்த பில்லிங் சுழற்சியில் கூடுதல் தொகை சரிசெய்யப்படுகிறது. "இந்த அணுகுமுறை நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறதுடன், வாரியத்தின் பொது பிம்பத்தையும் பாதிக்கிறது" என்று ஒரு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைப்பின் கீழ், வழக்கமாக ₹ 500 முதல் ₹2,500 வரை மாதாந்திர கட்டணம் பெறும் ஒரு வீட்டிற்கு, திடீரென ₹10,000- 15,000 அளவில் கட்டணம் வந்தால், மென்பொருள் உடனடியாகக் கணக்கில் பதிவேற்றாமல் எச்சரிக்கை செய்யும். இத்தகைய சமயங்களில், ஒரு வணிக ஆய்வாளர் நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று, மீட்டரைச் சரிபார்த்து, ரீடிங்கை அங்கேயே உறுதிசெய்வார்.
மின்சார கட்டண முறை மாற்றம்
உறுதி செய்யப்பட்ட தொகை மட்டுமே பின்னர் கட்டணமாக வசூலிக்கப்படும். வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சரிபார்ப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான நுகர்வோருக்கு ஏற்படும் அதிர்ச்சியூட்டும் கட்டணங்களைத் தடுக்க வாரியம் எதிர்பார்க்கிறது. இந்த முயற்சிக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க தமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ஈடுபட்டு உள்ளன . நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்க வசதியாக, தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இனி, பொதுமக்கள் மின்சார வாரியத்திடமிருந்து மட்டுமே மீட்டர் வாங்க காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான விலைப்பட்டியலையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மீட்டர் பற்றாக்குறையால் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இபி மீட்டர்
தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து நுகர்வோரும் இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மீட்டர்களை வாங்கலாம். மீட்டர்களை வாங்கிய பிறகு, நுகர்வோர் அவற்றை நிறுவும் முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கேட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டாங்கேட்கோ அதிகாரிகள் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கேட்கோவே மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து மொத்தமாக விநியோகித்து வந்தது. இப்போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மக்கள் நேரடியாக வாங்க முடியும்.
இருப்பினும், தற்போதைய மீட்டர் தட்டுப்பாடு புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை சரிசெய்யும் வகையில், இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படித்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications