கன்னியாகுமரி டூ ஜோத்பூர்.. மொத்தம் 2,600 கி.மீ! விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட சினேரியஸ் கழுகு!
சென்னை: தமிழக வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடு ஒன்று தேசியளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு அவர்களுக்கு பல தரப்புகளிலும் பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது.
அரிய வகை கழுகான சினேரியஸ் கழுகை கன்னியாகுமரியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு மிகவும் பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைத்து அதனை அதன் இயற்கை சூழலில் விடுவித்துள்ளது.
இது தொடர்பாக சுவாரஸ்யமான பின்னணியை இங்கே பார்க்கலாம்.

ஓக்கி புயல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு, கன்னியாகுமரி வனத்துறையினரால் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அன்று முதல் இப்பறவை உதயகிரி உயிரியல் பூங்காவில் வைத்து வனத்துறை அலுவலர்களால் சீரான, சரியான, தொடர்ந்து கவனம் செலுத்தி பராமரிக்கப்பட்டு, வளர்ந்து வந்தது.

சினேரியஸ் கழுகு
இப்போது, இந்த சினேரியஸ் கழுகு காட்டில் வாழ்வதற்கான தகுந்த உடல்நிலையோடு இருக்கிறது. ஒக்கி புயலின் நினைவாக இந்த சினேரியஸ் கழுகிற்கு, "ஒக்கி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சினேரியஸ் வகை கழுகானது, அதிக தொலைவு இடம் பெயர்ந்தும், கூட்டமாக வாழும் ஒரு சமூக பறவை. அதன் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறையானது சிறப்பு முயற்சிகள் எடுத்து, இப்பறவையை இயற்கை சூழலில் மீள அனுப்ப ஆணையிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்
தனியாக மீட்கப்பட்ட இளம் சினேரியஸ் கழுகு இனமானது அலைந்து திரியும் இயல்புடையது. காற்றோட்ட திசையின் மாறுபாடு காரணமாக இக்கழுகு கன்னியாகுமரியை வந்தடைந்திருக்கலாம். பெரிய கழுகு பெரும்பாலும் காற்றோட்ட திசை மற்றும் பருவநிலை சார்ந்த வெப்பத்தின் அடிப்படையில் உயர பறக்கும் தன்மையுடையது. பருவநிலை மாறுபாட்டால், இந்த இளம் கழுகு பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில்,சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கலாம் என்று பரிந்துரை பெறப்பட்டது.

கால்நடை சடலங்கள்
இதற்காக ராஜஸ்தான் மாநில வனஉயிரின பாதுகாவலரிடமிருந்து தேவையான அனுமதி பெறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடை சடலங்களை சேகரித்து கழுகினங்களுக்கு உணவளிக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஜோத்தாபூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள "கெரு" என்ற இடத்தில் இருக்கும் கால்நடை சடலங்களை சேகரித்து வைக்கும் இடத்தில், அதே வகை கழுகினங்கள் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகினை விடுவிக்கக் கூடிய சரியான இடமாக பரிந்துரை செய்யப்பட்டது.

2600 கி.மீ. தொலைவு
மேலும் இந்த இடத்திற்கு அருகில் ஜோத்பூர் உயிரியல் பூங்கா அதாவது மாச்சியா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் வளர்ப்பு கழுகுகளை பராமரிக்க தேவையான வசதிகள் உள்ளன. இந்த இடத்தை கழுகின் உடலில் உரிய டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்கா கன்னியாகுமரியிலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை அல்லது இரயில் மார்க்கமாக கழுகினை கொண்டு செல்வதற்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும்.

ஏர் இந்தியா விமானம்
மேலும் நெடுந்தூர சாலை/ இரயில் பயணம் இப்பறவைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த கழுகினை வான் வழியாக ஜோத்பூர் கொண்டு செல்ல மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து இதற்கென்று வனத்துறைக்கு உதவியது.அதன் அடிப்படையில் இந்த கழுகு கீழ்க்கண்டவாறு ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

குமரி டூ ஜோத்பூர்
30.10.2022கன்னியாகுமரியிலிருந்து சாலை மார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா வனஉயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட கழுகு, 3ஆம் தேதி நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூண்டில்போதிய காற்றோட்ட வசதியுடன், உயிருள்ள விலங்குகளை கொண்டு செல்வதற்கென்று உள்ள சர்வதேச விமான பயண நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கழுகு கொண்டு செல்லப்பட்டது.

காற்றோட்ட வசதி
விமான பயணத்தின்போது இக்கழுகுக்கு தேவையான காற்றோட்ட வசதி மற்றும் போதிய இடவசதியுடன் கொண்டு செல்வதற்கு ஏர் இந்தியா விமான பைலட்டுகள் பெறும் உதவி புரிந்தனர். டெல்லி விமான நிலையத்தில்பயண இடை நிறுத்தத்தின்போது தேவையான பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமான பைலட்டுகள் மற்றும் பணியாளர்களின் சிறந்த உதவியுடன் இந்த கழுகு ஜோத்பூர் உயிரின பூங்காவை சென்று அடைந்தது.
-
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications