திமுகவுக்கு வேல்முருகன் கொடுக்கும் டாஸ்க்; பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் இதை செய்ய வேண்டுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவை தோற்கடிக்க திமுக அரசு ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு நிர்வாகத்தை கவனிக்கவே நேரம் போதாமல் ஸ்டாலின் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், 5 மாநில அரசியலில் அவர் தலையிட வேண்டும் என கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கார்ப்பரேட்

கார்ப்பரேட்

நாட்டின் வளங்களை கார்ப்பரேட் நிறுனங்கள் கொள்ளையடிக்கவே, வேளாண் சட்டங்கள் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டன. விவசாயிகளிடம் எந்த கருத்துகளும் கேட்காமல் தான் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. கார்ப்பரேட் விவசாயத்திற்கு வசதி செய்து தருவதற்காகவும், நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்திடவும் இந்தச் சட்டம் வழி வகுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு, பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேச மாநில உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் ஒன்று திரண்டனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, சாதி, மதத்தால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டது. அத்திட்டம் பலனளிக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஒன்றிய அரசு, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை, தீவிரவாதிகள் என்றும் வெளிநாட்டு கைக்கூலிகள் என்றும் கொச்சைப்படுத்தியது.

விவசாயிகள்

விவசாயிகள்

இன்னொரு படி மேலே சென்று, டெல்லியில் அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை ஏவி வன்முறையை அரங்கேற்றியது மோடி அரசு. இந்த வன்முறையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமான விவசாயிகள் ஊனமடைந்தனர். பின்னர், 3 வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி வந்த மோடி அரசுக்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. மக்கள் கொடுத்த பதிலடியால் மோடி அரசு அதிர்ச்சியடைந்தது.

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இச்சூழலில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். அதே நேரத்தில், நாட்டு மக்கள் நலன் கருதியோ, விவசாயிகளின் போராட்டத்தின் எழுச்சி கருதியோ, ஒன்றிய அரசு இத்தகைய முடிவுக்கு வரவில்லை. மாறாக, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்களை வைத்து தான், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுகவுக்கு டாஸ்க்

திமுகவுக்கு டாஸ்க்

அதே வேளையில், மோடி அரசின் நரி தந்திரத்தையும் நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வருகின்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால், வேளாண் சட்டங்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான அபாயம் உள்ளது. எனவே, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவை, அம்மாநில மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான ஒருமித்த கருத்துடைய மாநிலங்களை ஒன்று திரட்டி மாபெரும் பிரச்சாரத்தை, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+