தனலட்சுமியின் அலறல் சத்தம்... கத்தியால் கிழித்த நபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்
சென்னை: சினிமா பாணியில், சென்னையில் பெண்ணிடம் தங்க தாலியை பறித்த கொள்ளையனை, பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடித்து கொடுத்தனர்.
பூந்தமல்லியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, இவர் காட்டுப்பாக்கம் இந்திரா நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், திடீரென தனலட்சுமியின் கையை, கத்தியால் கிழித்து விட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, கூச்சலிட்டதை அடுத்து, அங்கு திரண்டு பொதுமக்கள், கொள்ளையனை விரட்டிச் சென்று, மடக்கிப் பிடித்தனர். அவர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்ற போது, தர்ம அடித்து கொடுத்து கைகளை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து, அந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் சென்னை அயப்பன்தாங்கலைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது.
மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த மிளகாய் பொடி, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசிடம் அந்த நபர், சிக்கிக் கொள்ளும் போது தப்புவதற்காக போலி பத்திரிகை அடையாள அட்டையையும், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications