Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சாலையை மிரட்டிய 'லாம்போர்கினி'.. மடக்கிப் பிடித்த டிராபிக் போலீசார்.. இவ்வளவு அபராதமா?

சென்னையில் சீறி வந்த சொகுசு கார்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிரதான சாலையில் சீறி பாய்ந்த சொகுசு கார்களை மடக்கிபிடித்து போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். சமீப நாட்களாக சென்னையில் போக்குவரத்து காவலர்களின் வாகன தணிக்கை தீவிரமடைந்துள்ளது.

உலக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு உயிரிழக்கும் 10 சதவிகிதம் பேரில் 1 சதவிகிதத்தினர் இந்தியர்களாவார்கள். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டம் தமிழ்நாட்டிலும் தற்போது கறாராக பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே வாகன ஓட்டிகள் புலம்ப தொடங்கியுள்ளனர். இருப்பினும் கடந்த காலத்தை விட தற்போது விபத்துகள் ஓரளவு குறைந்திருப்பதாக போக்குவரத்து காவலர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து மற்றும் வாகன தணிக்கை பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களில் ஏராளமான வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அபராதம்

அபராதம்

மறுபுறம், குடிபோதையில் வாகனத்தை இயக்குவது, ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்யைில் மட்டும் கடந்த 6 வாரங்களில் மது போதையில் வாகனத்தை ஓட்டியதாக 4,922 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்களிடமிருந்து ரூ.5.9 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரமாக இருந்த அபராத தொகையானது சமீபத்தில் ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

 நம்பர் பிளேட்

நம்பர் பிளேட்

இதேபோல உரிய நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி நம்பர் பிளேட்டில் டிசைன் போடுவது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தியிருந்தனர். முதல் இரண்டு நாட்கள் அறிவுறுத்தலுக்கு பின்னர் அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் ஏராளமான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளின் நம்பர் பிளேட்டுகளையும் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்து அபராதம் விதித்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதேபோல வாகன திருட்டை தடுக்க 138 உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தி அவர்களை எச்சரித்துள்ளனர். திருட்டு வாகனங்களின் உதிரி பாகங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை(மார்ச்.12) வழக்கம்போல காமராஜர் சாலையில் வாகன சோதனையில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு சொகுசு கார்கள் போட்டிப்போட்டுக்கொண்டு சீறி வந்துள்ளது. இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் இரண்டு கார்களும் நிற்கவில்லை.

 சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சக காவலர்களின் உதவியுடன் கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அதிவேகமாக கார் ஓட்டுதல், சக பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் போன்ற பிரிவின் கீழ் காரின் உரிமையாளரிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கார் பிஎம்டபுள்யூ நிறுவனத்தை சேர்ந்ததாகும். மற்றொரு கார் 'லாம்போர்கினி' நிறுவனத்தினுடையதாகும். இதன் தொடக்க விலை ரூ.3.44 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+