நீட் ஜீரோ.. பலிபீடம்.. உயிரிழப்பை ஏற்படுத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வின் பலன் ஜீரோ என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

The Union BJP Government has accepted that benefit of NEET is ZERO says MK Stalin

NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS மற்றும் JIPMER ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. National Testing Agency என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. அரியலூர் அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை நீட் தேர்வினால் உயிர்பலி வாங்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் தங்களின் விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும். மேலும், முதுநிலை கலந்தாய்வுக்கான 3-வது சுற்றுக்கான புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைதளத்தில் வெளியிடப்படும், என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். NEETன் பலன் ZERO என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. NEET PG கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வில் 'தகுதி' என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது. மேலும் தகுதி தேவையில்லை.

NEET = 0. NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை.

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+