அகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் 4% அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். இந்த முறை முறை அகவிலைப்படின் உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி சுழற்சிக்கான அகவிலைப்படி. அடுத்து ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும். முந்தைய அறிவிப்பில், மத்திய அரசு 1.2 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்தியது. இதன் மூலம் அகவிலைப்படி 55% ஆக உயர்ந்தது.

bonus dearness allowance

அகவிலைப்படி உயர்வு மற்றும் எதிர்பார்ப்புகள்

கடந்த 78 மாதங்களில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியிலேயே மிக குறைவானது, கடந்த முறை அறிவிக்கப்பட்ட 2% உயர்வுதான். இந்த அகவிலைப்படி குறைவாக இருந்ததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது அரசு ஊழியர்கள் இடையே கடுமையான எதிர்வினைகளை சந்தித்தது. பல இடங்களில் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வு போதாது என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் அகவிலைப்படி தொகை.. அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகை கண்டிப்பாக 2 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் 4 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

பணவீக்கம் குறைந்திருந்தாலும், ஜூலை மாதத்திற்கான உயர்வு 4% ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள ஜூலை மாதத்திற்கான உயர்வு, ஊழியர்களின் எதிர்ப்பை சமாளிக்க அதிகமாக இருக்கலாம். இப்போதே இதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும். ஜனவரி மாதத்திற்கான உயர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது; ஜூலை மாதத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

நிலுவைத் தொகை விவரங்கள்

மத்திய அரசு ஏற்கனவே நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வுக்கான தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை அடிப்படை ஊதியம் மற்றும் பழைய அகவிலைப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

DA நிலுவைத் தொகை கணக்கிடும் சூத்திரம்:

DA நிலுவைத் தொகை = (புதிய DA % - பழைய DA%) × அடிப்படை ஊதியம் × மாதங்களின் எண்ணிக்கை

உதாரணம்:

அடிப்படை ஊதியம்: ₹35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
நிலுவைத் தொகை: = 0.04 × ₹35,400 × 4 = ₹5,664
இந்த கணக்கீட்டின் மூலம் ஒவ்வொரு ஊழியரும் தங்கள் நிலுவைத் தொகையை அறிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் இந்த தொகை வழங்கப்படும்.

8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த நிலுவைத் தொகையால் பயனடைவார்கள். இது அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தை சமாளிக்கவே அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் ​​2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து 3%க்கு கீழ் குறைந்து கொண்டே இருப்பதால் கடந்த முறை அகவிலைப்படி குறைந்தது. இந்த முறை பிட்மென்ட் காரணி பயன்படுத்தப்பட்டு, மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+